என்னை பல ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணுனாங்க; வேதனையை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்!

Published : Feb 15, 2025, 09:48 AM IST

என்னுடன் நடிப்பதற்கே பல நடிகைகள் தயக்கம் காட்டிய நிலையில், இன்று நான் அனுபமா பரமேஸ்வரன் உடன் இணைந்து நடித்திருக்கிறேன் என்று பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.  

PREV
14
என்னை பல ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணுனாங்க; வேதனையை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்!
இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன்:

'கோமாளி' படம் மூலமாகை இயக்குநராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். சென்னையில் பிறந்து வளர்ந்து ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். நாளடைவில் அந்த வேலையை விட்டு விட்டு யூடியூப்பில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய முதல் படம் தான் 'கோமாளி'. வித்தியாசமான கதையுடன் வந்த இந்தப் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டினார். ரவி மோகனுக்கு இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
 

24
கோமாளி பட இயக்குனர்:

யதார்த்தமான கதை, யதார்த்தமான நடிப்பு என்று எல்லாவற்றையும் ரசிக்கும் படி கொடுத்து மாஸ் காட்டினார். கோமாளிக்கு பிறகு லவ் டுடே என்ற படத்தில் இயக்கி நடித்தார். சிறந்த நடிகருக்கான சைமா விருது, தென்னிந்தியாவில் சிறந்த அறிமுக நடிகர் நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை 'லவ் டுடே படம்' இவருக்கு பெற்றுக் கொடுத்தது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.100 கோடி பட்ஜெட் கொடுத்து ஹிட் படமாக அமைந்தது.

DRAGON Movie Press Meet | டிராகன் பெயரின் காரணம் என்ன? DRAGON திரைப்படக் குழுவினர் கலகலப்பான பேட்டி
 

34
பிரதீப் ரங்கநாதனை ரிஜெக்ட் செய்த நடிகைகள்:

இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இந்தப் படம் நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்தார். மேலும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ரவி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டிராகன்' படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன் கூறுகளில்... "நடிகைகள் என்னுடன் நடிக்க ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். லவ் டுடே படத்திற்காக பல நடிகைகளை அணுகினேன். ஆனால், யாரும் ஓகே சொல்லவில்லை. ரிஜெட் தான் பண்ணுனாங்க என வேதனையை பகிர்ந்த பிரதீப், ஆனால் இன்று டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உடன் நான் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்".
 

44
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம்:

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து கயாடு லோஹர், ஜார்ஜ் மரியன், கேஎஸ் ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் மேனன், சினேகா (சிறப்பு தோற்றம்), அஸ்வத் மாரிமுத்து (சிறப்பு தோற்றம்), விஜே சித்து என்று பலரும் நடித்துள்ளனர். ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுனம் தயாரித்துள்ளது. லியான் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். டிராகன் படத்திற்கு பிறகு லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி, பிஆர்4 ஆகிய படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

DRAGON Movie Press Meet | எனக்கு கிடைத்த இரண்டாவது மிகப்பெரிய வாய்ப்பு இது! பிரதீப் ரங்கநாதன் பேச்சு

Read more Photos on
click me!

Recommended Stories