உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பாவனி ரெட்டி. பல தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான, பாவனியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது சீரியல்கள் தான். இதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை.
27
சின்னதம்பி சீரியல்:
குறிப்பாக பாவனி ரெட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மிகப்பெரிய இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாவனி 'பாசமலர்' என்கிற தொடரில் நடித்த போது, அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த பிரதீப் குமார் என்பவரையே காதலித்து, 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை மூன்றே மாதத்தில் முடிவுக்கு வந்தது.
பாவனி கணவர் பிரதீப், திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னரே சின்னத்தம்பி சீரியலில் நடித்தார். கணவரின் நண்பருடன் சில வருடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த பாவனி பின்னர், அவரிடம் இருந்து விலகினார். இதன் பின்னரே இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு, போட்டியாளராக உள்ளே வந்த அமீர் பாவனி மீது காதல் வயப்பட்ட நிலையில், அதனை ஓப்பனாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் அறிவித்தார். ஆனால் பாவனி இவருடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடிய போது, இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி இவர்களை காதலர்களாக மாற்றியது.
47
மூன்று ஆண்டுகள் டேட்டிங்:
காதலிக்க துவங்கிய பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது திருமணத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், தளபதி படத்தில் வரும் நான் உன்னை நீங்க மாட்டேன் என்கிற பாடலின் மியூசிக் கோடி... தங்களின் காதல் அனுபவம் மற்றும் திருமணம் வரை வந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அமீர் மற்றும் பாவனி தங்களுடைய காதலை அறிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோவில், " இந்த 3 வருஷம் எப்படி போச்சுனே தெரியல. புடிச்சவங்க கூட இருந்தா 3 வருஷம் கூட 3 நிமிஷம் போல தான் இருக்கும்" என பாவனி பேச... இவரை தொடர்ந்து பேசும் அமீர் "இந்த மூணு வருஷத்துல எவ்வளவு என்ன முடியாத நினைவுகள். ஒரு பையனுக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம், அவனுக்கு ரொம்ப புடிச்ச பொண்ணு அவனுடைய காதல ஏத்துக்கிறது தான். நீ என் காதலை எதுக்குவனு நான் நினைச்சு கூட பாக்கல. நான் உனக்கு இப்போ தான் ப்ரொபோஸ் பண்ண மாதிரி இருக்கு". என சொல்லி முடிக்கிறார்.
67
காதலை அறிவித்த தருணம்:
இவரை தொடர்ந்து பேசும் பாவனி "அந்த சமயத்துல என்னுடைய இதயத்துடிப்பு எவ்வளவு வேகமா இருந்துச்சு தெரியுமா? பயமும் சந்தோஷமும் கலந்த ஒரு பீல். எங்க மறுபடியும் தப்பான முடிவ எடுத்துடுவேனோ என்கிற பயம். ஆனால் நீ கொடுத்த நம்பிக்கை நம்மை இவ்வளவு தூரம் ஒரு காதல் பயணத்தில் நடக்க வச்சிருக்கு" என பேசுகிறார். இதைத்தொடர்ந்து அமீர் பேசும்போது, இதுக்கு அப்புறமும் நடக்க போறோம்... லைஃப் லாங் முடியுற வரைக்கும்" என கூறுகிறார்.
பின்னர் பாவனி பேசுவது போல் இடம்பெறும் காட்சியில்... "நிறைய சந்தோஷம், நிறைய சிரிப்பு, நிறைய கோபம், ஆனாலும் எல்லாமே அழகா இருந்துச்சு. இதை தொடர்ந்து அமீர், " மணி கணக்கா போன் பேசுனது. உனக்காக நானும் - எனக்காக நீயும், எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் பரவால்ல என நினைத்தேன் நீ இருக்க என்ற நம்பிக்கையில என சொல்கிறார். இறுதியாக பாவனி எல்லாமே கேட்பதற்கு நல்லா இருக்கு ஆனா அடுத்து என்ன? என்று கேட்க அமீர் தன்னுடைய கையை நீட்டி சரி வா வாழலாம் என கூற... பாவனியும் சம்மதம் என கை கொடுக்கிறார். இந்த க்யூட் வீடியோவை வெளியிட்டு தங்களுடைய திருமணம் ஏப்ரல் 20 ஆம் தேதி 2025 அன்று நடைபெற உள்ளது என்பதை அமீர் - பாவனி ஜோடி அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.