தங்க வளையல் போட்டு.. சினேகன் - கன்னிகாவின் மகள்களுக்கு கமல்ஹாசன் வைத்த பெயர்.. என்ன தெரியுமா?

Published : Feb 14, 2025, 10:08 PM IST

பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட சினேகன், மனைவி கன்னிகாவுடன் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த இரட்டையர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.

PREV
16
தங்க வளையல் போட்டு.. சினேகன் - கன்னிகாவின் மகள்களுக்கு கமல்ஹாசன் வைத்த பெயர்.. என்ன தெரியுமா?
சினேகன்

கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட நபராக சினேகன் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.. புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாராசிரியராக அறிமுகமான சினேகன் இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை  எழுதி உள்ளார்.

26
ஹிட் பாடல்கள்

குறிப்பாக நெஞ்சை விட்டு நீங்காத பல ஹிட் பாடல்களை சினேகன் எழுதி உள்ளார். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே பாட என தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

36
நடிகராக மாறிய சினேகன்

மேலும் யோகி, உயர்திரு 420, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற சினேகன் 2-வது இடத்தை பிடித்தார்.  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் போட்டியிட்ட சினேகன், 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

46
சினேகன் கன்னிகா திருமணம்

இதனிடையே 2021-ம் ஆண்டு நடிகை கன்னிகாவை சினேகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கன்னிகா தனது யூ டியூப் சேனாலில் சமையல் வீடியோக்கள் உள்ளிட்ட பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

56
இரட்டை பெண் குழந்தைகள்

சினேகன் - கன்னிகா தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதுகுறித்து எமோஷனலாக பதிவிட்டு தனது மகிழ்ச்சியை சினேகன் வெளிப்படுத்தி இருந்தார். 

66
பெயர் வைத்த கமல்ஹாசன்

இந்த நிலையில் சினேகன் - கன்னிகாவின் மகள்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சினேகன் பதிவிட்டுள்ளார் அவரின் பதிவில் “ காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ...  காதல்" என்ற  பெயரையும் "கவிதை " என்ற பெயரையும்.. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் கமல்ஹாசன்  அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள் நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சினேகன் - கன்னிகா தம்பதியின் மகள்களான காதல், கவிதை ஆகியோருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories