சன்னியாசியாக மாறிய நடிகை நிகிலா விமலின் சகோதரி!

Published : Feb 14, 2025, 08:14 PM ISTUpdated : Feb 14, 2025, 08:17 PM IST

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிகிலா விமலின் சகோதரி அகிலா விமல், சன்னியாசம் மேற்கொண்டது பற்றி நிக்கிலா விமல் பேசியுள்ளார்.

PREV
16
சன்னியாசியாக மாறிய நடிகை நிகிலா விமலின் சகோதரி!
அகிலா விமல் சன்னியாசம்

நடிகை  நிகிலா விமலின் சகோதரி, அகிலா விமல் சன்னியாசம் மேற்கொண்டுள்ளார் என்கிற செய்தி தற்போது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகிலா சன்னியாச உடையில் இருக்கும் புகைப்படமும், அபிநவ பாலானந்த பைரவாவின் முகநூல் பதிவும் இந்த செய்தியை உறுதி படுத்தி உள்ளது. 

தனது சகோதரி சன்னியாசம் மேற்கொண்டது குறித்து, நிக்கிலா விமல் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறுகையில்...

26
என் அக்காவின் தனிப்பட்ட உரிமை

"எனது அக்காவுக்கு 36 வயதாகிறது. அவள்  திடீரென்று ஒரு நாள் சன்னியாசம் போக வேண்டும் என முடிவு செய்யவில்லை. முறையாக அந்த பாதைக்கு தன்னை தயார் செய்து கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளார்.  அது முழுக்க முழுக்க அவளின் தனிப்பட்ட உரிமை. நன்றாக படித்தவள். எனவே எதையும் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டாள்.

குடும்ப குத்து விளக்கா இருந்த நிக்கிலா விமலா இது..? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி மாடர்ன் உடையில் கலக்கும் புகைப்படங்கள்..!

36
இதில் அதிர்ச்சியடைய எதுவும் இல்லை:

நான் சினிமாவில் நடிப்பதை யாரும் கேள்வி கேட்பதில்லை. சகோதரியின் விஷயத்திலும் அதுவே நடந்தது. என் சகோதரியின் முடிவில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், வாழ்க்கையில் யோசித்து முடிவெடுப்பவர் எனது சகோதரி என்று நிக்கிலா கூறியுள்ளார்.

இதை கேட்டதும் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லையா? என கேட்டதற்கு, இல்லை, நான் அதிர்ச்சியடையவில்லை. இதைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அவ்வளவு அறிவோ, புத்தியோ, கல்வியோ எனக்கில்லை. கேட்கும் உங்களுக்கு அதிர்ச்சி இருக்கிறதே தவிர, எங்களுக்கு இல்லை. சாதாரணமாக ஒரு வீட்டில் பிள்ளைகள் படிப்பார்கள், வேலை செய்வார்கள், திருமணம் செய்து கொள்வார்கள். என் வீட்டில் அப்படி இல்லை, கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது அவ்வளவு தான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லை.

46
நிக்கிலா விமலின் கருத்து

தொடர்ந்து பேசிய நிகிலா விமல், என் அப்பா ஓர் நக்சலைட். நக்சலைட்டின் மகள் எப்படி சன்யாசியானாள் என்று சிலர் கேட்பார்கள்.  சாதாரண வீடு அல்ல என்னுடையது. என் வீட்டில் சாதாரணமாக அம்மா மட்டும் தான் இருப்பார். என் வீட்டை பொறுத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. என் வீட்டாருக்கு இல்லாத அதிர்ச்சி ஊர் மக்களுக்கு ஏன் வர வேண்டும் என்று நிகிலா கேள்வி எழுப்பியுள்ளார்.

குடும்ப குத்து விளக்கா இருந்த நிக்கிலா விமலா இது..? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி மாடர்ன் உடையில் கலக்கும் புகைப்படங்கள்..!
 

56
அபிநவ பாலானந்த பைரவா பதிவு

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அபிநவ பாலானந்த பைரவா அகிலாவின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பகிர்ந்தார். "ஜூனா பீடாதிஸ்வர் ஆச்சார்ய மகா மண்டலேஸ்வர் சுவாமி அவதேசானந்த கிரி மகாராஜிடம் இருந்து சன்யாசமும் மகா மண்டலேஸ்வர் பதவியும் பெற்று சலில் சேட்டன் என்பதில் இருந்து ஆனந்தவனம் பாரதி என்ற பெயருக்கும், சாஸ்திராத்யயனத்தில் என்னுடைய சீடருமான அகிலா இன்று அவந்திகா பாரதி என்ற பெயருக்கும் வந்ததில் காஷ்மீர் ஆனந்த பைரவ பரம்பரையின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தர்ம பிரச்சாரத்திற்கும் தர்மத்தை காப்பதற்கும் ஆன அகாடாவின் செயல்பாடுகளை கேரளத்திலும், இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி இந்தியாவின் பாரம்பரியத்தை உயர்த்த இருவருக்கும் முடியட்டும் என்று தேவியிடம் பிரார்த்தித்து, நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம்" என்று அபிநவ பாலானந்த பைரவாவின் பதிவு.

66
நிக்கிலா விமலின் குடும்பம்

பதிவுடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் சன்னியாசமஉடையில் காவி தலைப்பாகை அணிந்து அமர்ந்திருக்கும் அகிலாவையும் காணலாம். நிக்கிலா மற்றும் அகிலாவின் தாயார் பெயர் விமலாதேவி, தந்தை பெயர் எம்.ஆர். பவித்ரன். இருவரும் சிறு வயதிலேயே நடனம் பயின்றவர்கள். நிக்கிலா சினிமா பாதையை தேர்ந்தெடுத்த போது, அகிலா படிப்பில் கவனம் செலுத்தினார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நாடக கலையில் ஆராய்ச்சி படிப்பை முடித்த அகிலாவின் மேற்படிப்பு அமெரிக்காவில் இருந்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மெலான் ஸ்கூல் ஆஃப் தியேட்டர் அண்ட் பெர்ஃபாமன்ஸ் ரிசர்ச்சில் ஃபெல்லோவாக இருந்தார் அகிலா. ஆனால் தற்போது ஆன்மீக பாதையில் செல்லும் முடிவை எடுத்துள்ளார்.

click me!

Recommended Stories