இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் 'விடுதலை 2'. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி, இதுவரை சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுத்திகிறது.
24
Vijay sethupathi and Soori
ஆனால் முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது, இரண்டாம் பாதி மிகவும் ஸ்லோவ்வாக நகர்வதாகவும், எப்போதும் நடிகர்களின் பர்ஃபாம்மென்ஸ் மூலம் படத்தை பேச வைக்கும் இயக்குனர் வெற்றிமாறன், 'விடுதலை 2' படத்தில் கம்யூனிசம் பற்றி அதிகம் பேசி, ரசிகர்களை போர் அடிக்க வைத்துவிட்டார் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
அதே போல், பல இடங்களில் இது வெற்றிமாறனின் படமா? என ரசிகர்கள் குழம்பும் படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 'விடுதலை 2' படத்தில் சில குறைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியரின் நடிப்பு நிகர் செய்து விடுகிறது. வெற்றிமாறனின் 4 வருட கஷ்டங்களை பல பிரேம்களில் ரசிகர்கள் உணர முடிகிறது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் வெற்றிமாறன் 100 நாட்களை செலவழித்துள்ளார்.
44
Viduthalai 2 OTT Update
'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களுக்காக எடுக்கப்பட்ட காட்சியை வைத்து 3-ஆவது பாகம் கூட வெளியிடலாம் என்கிற அளவுக்கு பலமணிநேர காட்சிகள் வெற்றிமாறனின் கைவசம் உள்ளதாம். 'விடுதலை 2' படத்தில் இணைக்கப்பட்ட காட்சிகளை கூட, 10 நிமிடம் கட் செய்த வெற்றிமாறன். இப்போது 'விடுதலை 2' படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக சுமார் 1 மணிநேர காட்சியை இணைந்து வெளியிட முடிவு செய்துள்ளாராம். அதன்படி இப்படம் அடுத்த மாதம் 2 அல்லது 3-ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.