ரசிகை உயிரிழப்பு; 19 நாட்களுக்கு பிறகு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்த புஷ்பா 2 தயாரிப்பாளர்கள்!

First Published | Dec 24, 2024, 10:30 AM IST

Pushpa 2 Producers Gives Rs 50 Lakhs : புஷ்பா 2 பட சிறப்பு காட்சியின் போது ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து 19 நாட்களுக்கு பிறகு தயாரிப்பாளர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளனர்.

Pushpa 2 Producers Gives Rs 50 Lakhs

Pushpa 2 Producers Gives Rs 50 Lakhs : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2. ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் சாதனை மேல் சாதனைகள் குவித்து வருகிறது. விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு. அனைத்து மொழிகளிலும் புஷ்பா 2 வசூல் மழை பொழிந்து வருகிறது. இதுவரை ரூ.1600 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 1029.65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

எனினும், படம் வெளியான போது ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை 4 மணி ஷோவிற்கு ரசிகர்களின் வருகை அதிகளவில் இருந்தது. அப்போது அல்லு அர்ஜூனும் அந்த திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்துள்ளார். இதையடுத்து கூட்டம் அலைமோதியது. திரையரங்கு பாதுகாவலர்களால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

Pushpa 2 Producers Gives Rs 50 Lakhs to family of a Women Who Died in a Crowd

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து லத்தி சார்ஜில் ஈடுபடவே கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். எனினும், அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ரேவதியின் மகன் மூளைச்சாவு அடைந்து கோமாவிற்கு சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே, அல்லு அர்ஜூன், திரையரங்கு உரிமையாளர்கள், பாதுகாவலர்கள் என்று அனைவரும் கைது செய்யப்பட்டனர். அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் மூலமாக இடைக்கால ஜாமீன் பெற்றார். எனினும் ஜாமீனுக்கான ஆவணங்கள் கிடைக்க காலதாமதம் ஆன நிலையில் அல்லு அர்ஜூன் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்துள்ளார்.

Tap to resize

Revathi Died Pushpa 2 Special Show

இதையடுத்து சிறையிலிருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜூன், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்து. எனினும், இச்சம்பவம் தன்னை ரொம்பவே பாதித்தது. என்னால் முடிந்த உதவிகளை ரேவதியின் குடும்பத்திற்கு செய்வென் என்று கூறியிருந்தார். அதோடு ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

Pushpa 2 Producers Gives Rs 50 Lakhs to family of a Women Who Died in a Crowd

இந்த நிலையில் தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதோடு ரேவதி உயிரிழந்தது தெரிந்தும் அல்லு அர்ஜூன் 3 மணி நேரம் படம் பார்த்த பிறகு தான் திரையரங்கிலிருந்து வெளியில் வந்தார் என்று விமர்சித்தார். இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜூன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Allu Arjun, Rashmika Mandanna, Pushpa 2

இந்த நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் மகனை சந்திக்க சென்ற புஷ்பா 2 பட தயாரிப்பாளர்கள் அவரது கணவரிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். ஏற்கனவே அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் 50 லட்சம் வழங்கி இச்சம்பவத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

Latest Videos

click me!