Vaadivaasal
நடிப்பின் நாயகன் சூர்யாவும், இயக்குனர் வெற்றிமாறனும் வாடிவாசல் என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கடந்த 2020-ம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. இதோடு இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அதன்பின் அப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Vaadivaasal
இடையே ஒரு நாள் மட்டும் வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷூட் ஒன்று நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு வீரர்களுடன் களமிறங்கி காளையுடன் மல்லுக்கட்டும் காட்சி மட்டும் எடுக்கப்பட்டது. அந்த காட்சியும் கடந்தாண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்டது. அதன்பின் அப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டனர். இதனால் வாடிவாசல் படம் உருவாகுமா அல்லது டிராப் செய்யப்பட்டதா என்கிற கேள்வியும் எழத் தொடங்கியது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் துணிவு பட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்த போர் தொழில் - அல்டிமேட் ஸ்டாரை ஓரங்கட்டிய சுப்ரீம் ஸ்டார்!
Vaadivaasal
அப்படி குழப்பத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அதன்படி, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம் வாடிவாசல் படத்தில் நிலை குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Vaadivaasal
மேலும், வாடிவாசல் படத்திற்கான அனிமேட்ரானிக்ஸ் பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருவதாக கூறிய அவர், விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் வாடிவாசல் பட ஷூட்டிங் தொடங்கப்படும் என உறுதிபட தெரிவித்தார். அதோடு, சூர்யா பயிற்சி எடுத்து வரும் ஜல்லிக்கட்டு காளை போன்று ஒரு ரோபோ காளை ஒன்றையும் உருவாக்கி வருவதாகவும், அதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது என வெற்றிமாறன் கூறியுள்ளார். அவர் கொடுத்த இந்த அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் செம்ம குஷியாகிப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்