தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் பவானி ஸ்ரீ. இவர் உதவி இயக்குனராக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த சம்டைம்ஸ் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் பவானி.
25
Bhavani sre
இதையடுத்து விருமாண்டி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பவானி ஸ்ரீ. இப்படத்தில் மாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த அவர், பின்னர் சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தார் பவானி.
பின்னர் பவானியின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்துபோன இயக்குனர் வெற்றிமாறன், அவர் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் பவானியை சினிமாவில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் பவானி ஸ்ரீ. இப்படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
45
Bhavani sre
அடுத்ததாக விடுதலை 2-ம் பாகம், நண்பன் ஒருவன் வந்த பிறகு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் பவானி ஸ்ரீ. இவர் தன்னுடைய அண்ணன் ஜிவி பிரகாஷ் இசையில் புத்தம் புது காலை என்கிற வெப் தொடருக்காக பாடலும் பாடி இருக்கிறார்.
55
Bhavani sre
இப்படி பிசியான நாயகியாக வலம் வரும் பவானி ஸ்ரீ, தற்போது சேலையில் செம்ம அழகாக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அவரின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டாப் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு செம்ம சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.