ரியாலிட்டி ஷோ மூலம் தொடங்கிய ஐஸ்வர்யா - உமாபதி காதல்... திருமணம் எப்போது? - தம்பி ராமையா தந்த சூப்பர் அப்டேட்

First Published | Jun 26, 2023, 11:06 AM IST

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வரும் நிலையில், அவர்களது திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Umapathy, Aishwarya Arjun

சினிமா நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது கோலிவுட்டில் புதிதல்ல. அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் புதிதாக இணைய உள்ள ஜோடி தான் உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜுன். நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வருவது தான் தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வரும் செய்தி.

Umapathy

உமாபதி தமிழில் அதாகப்பட்டது மஹா ஜனங்களே, தண்ணி வண்டி, மணியார் குடும்பம், சேரன் இயக்கிய திருமணம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ராஜாக்கிளி என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் உமாபதி. இப்படத்திற்கு தம்பி ராமையா தான் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி உள்ளார். சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... பொறுக்கித்தனமான பாடலை பாடியிருக்காரு... அவரெல்லாம் ஒரு மனுஷனா - விஜய்யை வெளுத்துவாங்கிய ராஜேஸ்வரி பிரியா

Tap to resize

Aishwarya Arjun

அதேபோல் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவரது தந்தை இயக்கிய சொல்லிவிடவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஐஸ்வர்யா.

இப்படி இருவருமே சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ - ஹீரோயினாக இருந்து வரும் நிலையில், இவர்கள் இடையே எப்படி காதல் மலர்ந்தது என்பது தான் பலரது தேடலாக இருந்தது. அதற்கு நடிகர் தம்பி ராமையாவே சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி நடிகர் அர்ஜுன் கடந்த 2021-ம் ஆண்டு சர்வைவர் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Aishwarya Arjun, Umapathy Thambi Ramaiah

அந்த நிகழ்ச்சியில் உமாபதியும் ஒரு போட்டியாளராக இருந்தார். அந்நிகழ்ச்சி மூலம் தான் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து நடிகர் அர்ஜுன் சென்னையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கடந்த ஆண்டு கட்டினார். அந்த கோவிலில் தான் தம்பி ராமையா குடும்பமும், அர்ஜுனின் குடும்பமும் முதன்முறையாக சந்தித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்களாம்.

ஐஸ்வர்யா - உமாபதி ஜோடியின் திருமண தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்த தம்பி ராமையா, கண்டிப்பாக தை மாசம் அதாவது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் அவர்களது திருமணம் நடைபெறும் என கூறி இருக்கிறார். ஐஸ்வர்யா - உமாபதி ஜோடியின் திருமண தேதி வருகிற நவம்பர் 8-ந் தேதி உமாபதியின் பிறந்தநாளன்று வெளியிடப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்.! லியோ படத்திற்கு சிக்கல்.? போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

Latest Videos

click me!