Rajeshwari Priya, vijay
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் விஜய்யின் பிறந்தநாளன்று லியோ படத்திற்காக அவர் பாடிய நா ரெடி என்கிற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. அனிருத் இசையில் அவர் பாடிய இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. மறுபுறம் இதற்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
rajeshwari priya
அந்த வகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, விஜய் பாடிய நா ரெடி பாடலுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது : “லியோ படத்தின் பாடல் வரிகள் முழுவதும் மதுவை பற்றியும், புகைப்பிடிக்கிறது பற்றியும், புகைப்பிடித்தால் உங்களுக்கு பவர் கிடைக்குதுனு சொல்றாங்க, மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும் இந்த மாதிரியான வார்த்தைகள் வரிகள் எல்லாம் பயன்படுத்தலாமா.
அவருக்கு ரசிகர்கள் 5 வயதில் இருந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவருக்குப் கொஞ்சமாவது சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டாமா. விரலுக்கு இடையில தீப்பந்தமாம்... இதெல்லாம் ஒரு வரியா, இதை எழுதுன அசல் கோளாறு, முழு கோளாறான ஆளு. இதுமாதிரியான கிழ்தரமான வரிகளை பாட விஜய்க்கு எப்படி மனசு வந்துச்சு.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்.! லியோ படத்திற்கு சிக்கல்.? போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
Leo
ஏற்கனவே சொல்லிருந்தாரு இனிமே சிகிரெட் வாய்ல வச்சுட்டு நடிக்க மாட்டேன்னு, ஆனா சர்க்கார் படத்துல முதல் காட்சியே சிக்ரெட் வச்சுட்டு இருந்தாரு, அதற்கும் நான் எதிர்ப்பு கொடுத்தேன். இந்த பாடல் மூலமா ஒரே ஒரு இளைஞனோ, ஒரு பள்ளி மாணவனோ வீணா போனா அதற்கு யார் பொறுப்பேற்பது. விஜய் பொறுப்பேற்பாரா?
மாணவர்களுக்கு விருது கொடுத்து, அவர்களை நேர்ல சந்தித்தீர்களே, அந்த அரங்கத்தில் இந்த பாடலை உங்களால பதிவிட முடியுமா?. ஏதாவது ஒரு வரி இருந்தா பரவாயில்லா, பாடல் முழுக்கவே அப்படி தான் இருக்கிறது. எனக்கு பாட்டில்ல பத்தாது அண்டாவுல கொண்டுவந்து குடுனு சொன்னா, இதை எதிர்க்காம எப்படி இருக்க முடியும்.
vijay
இதை சினிமாவாக பார்க்க முடியாது. இதன்மூலம் ஒருநபர் வீணானாலும் அதற்கு விஜய் தான் காரணம். இதுதொடர்பா நான் வழக்கு தொடரப்போறேன். அந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும், அல்லது அந்த பாடலையே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர உள்ளேன்.
பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? எத பாடுறோம்னு கூட தெரியலேன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்க பொதுநலம் குறித்து இந்த மாணவர்களுக்கெல்லாம் விருது கொடுக்குறீங்க. சமூக சேவை செய்து நீங்கள் மக்களை ஏமாற்றியது போதும். சிகரெட்டை புரமோஷன் பண்ண விஜய் எத்தனை கோடி வாங்குனாருன்னு இந்த இளைஞர்களுக்கு தெரியுமா? என சரமாரியாக விஜய்யை சாடி உள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
இதையும் படியுங்கள்... ரிஸ்க் எடுத்து நடித்ததால் ஏற்பட்ட விபரீதம்... விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பிருத்விராஜுக்கு தீவிர சிகிச்சை