kabir duhan singh
மும்பையை சேர்ந்தவரான கபீர் துஹான் சிங், மாடலிங் துறை மூலம் தன் பயணத்தை தொடங்கினார். விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு நடிகனாக அங்கீகாரம் அளித்தது தென்னிந்திய சினிமா தான். தெலுங்கில் வெளியான கிக் என்கிற திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார் கபீர் துஹான் சிங். இப்படம் தெலுங்கில் வேறலெவலில் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
kabir duhan singh
இதன்பின்னர் 2015-ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக களமிறங்கினார் கபீர் துஹான் சிங். தமிழில் முதல் படமே அஜித்துடன் நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்து விஜய் சேதுபதியின் றெக்க, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 போன்ற படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக மிரட்டினார் கபீர் துஹான் சிங்.
இதையும் படியுங்கள்... ரூ.60 லட்சம் வீடு முதல் 25 லட்சம் பணம் வரை! சூப்பர் சிங்கர் வின்னர்ஸுக்கு வாரிவழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன?
kabir duhan singh
நடிகர் கபீர் துஹான் சிங்கும், ஹரியானாவை சேர்ந்த சீமா சஹால் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணம் டெல்லியில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
kabir duhan singh
கபீர் துஹான் சிங் - சீமா சஹால் தம்பதிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் கபீர் துஹான் சிங்கின் மனைவி சீமா சஹால் டீச்சராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பாணியில் காதல் திருமணம் செய்துகொண்ட கபீர் துஹான் சிங்கிற்கு அஜித் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியதால் வாய்ப்பளிக்க மறுத்த இசைஞானி... இளையராஜா மீது பாடகி மின்மினி பரபரப்பு புகார்