அசுரன் படத்துக்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சேத்தன், ராஜீவ் மேனன், கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, தமிழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
விடுதலை படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். அவர் இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்ட வெற்றிமாறன் அப்படத்தின் முதல் பாகத்தை மார்ச் இறுதியிலும், இரண்டாம் பாகத்தை அதன்பின் 4 மாதத்தில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருந்தார். அதன்படியே விடுதலை முதல் பாகம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்... என்ன சீமான் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு - ஷாக் ஆன ரசிகர்கள்
ரிலீஸ் ஆனது முதல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி விடுதலை முதல் பாகம் ரிலீசாகி இரண்டு வாரங்களில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன் இரண்டு பாகங்களை எடுக்கவும் மொத்தமாக ரூ.40 கோடி பட்ஜெட் செலவான நிலையில், முதல் பாகத்திலேயே அதற்குமேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது விடுதலை திரைப்படம்.
இந்நிலையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் திட்டமிட்டபடி 4 மாதத்தில் ரிலீஸ் ஆகாது என்கிற ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை வருகிற டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிடும் முடிவில் இருக்கிறதாம் படக்குழு. விடுதலை 2-ம் பாகம் தள்ளிப்போனதற்கு முக்கிய காரணம் அதன் முதல் பாகத்தின் வெற்றி தானாம்.