Jana Nayagan: 25 வருடங்களுக்கு பின் தளபதியின் 'ஜனநாயகன்' படத்தில் இணைந்த குஷி பட நடிகர்!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தில், இணைந்துள்ள 'குஷி' பட நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 
 

Veteran Actor Nizhalgal Ravi  joins Thalapathy Vijay Jana Nayagan Film mma
Jana Nayagans heroine says she is sad

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'குஷி'. எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய இரண்டாவது படமாக இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், எஸ்.ஜே.சூரியாவும் இன்ட்ரோ காட்சியில் நடித்திருப்பார். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, மும்தாஜ், விவேக், விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Veteran Actor Nizhalgal Ravi  joins Thalapathy Vijay Jana Nayagan Film mma
தளபதி விஜய்க்கு ஹிட் கொடுத்த குஷி திரைப்படம்

3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் ரூ.22 கோடி வரை வசூல் செய்தது. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு, தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. குறிப்பாக ஒரு பொண்ணு ஒன்று நான் பார்த்தேன், கட்டிப்பிடி கட்டிப்பிடி, மேகம் கருக்குது, மேகரீனா போன்ற பாடல்கள் ஆள் டைம் தளபதி ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களாகும்.

தளபதிக்கு Y பிரிவு பாதுகாப்பு; விஜய் நீலாங்கரை உதவி ஆணையர் நடத்திய முக்கிய ஆலோசனை என்ன?


தளபதியின் ஜன நாயகன் படத்தில் இணைந்த பிரபலம்

தளபதி விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த படம் படத்தில் தளபதிக்கு தந்தையாக நடித்திருந்தனர் தான் நிழல்கள் ரவி. இந்த படத்திற்கு பின்னர் தளபதி விஜய்யுடன் இவர் எந்த படத்திலும் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது... 25 வருடங்கள் கழித்து தளபதி விஜய்யின் 69-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதியுடன் 25 வருடங்களுக்கு பின் இணையும் நிழல்கள் ரவி:

இந்த படத்திலும், தளபதி விஜய்க்கு அப்பாவாக நிழல்கள் ரவி நடிக்கிறாராம். தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்ல பிரபலங்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் பிரியாமணி, ஸ்ருதிஹாசன், மமிதா பாஜு, மோனிஷா, மௌனிகா ஜான், வரலட்சுமி ஆகியோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?

Latest Videos

click me!