இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு முன்பு வெளிநாட்டு கலைஞர்கள் சிம்பொனியை இசையை அரங்கேற்றிய நிலையில், ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார்.
சிவகுமார் மற்றும் சூர்யா இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து
இந்த நிலையில் தான் நடிகர் சிவகுமார் தனது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சிவகுமார் தங்கசங்கிலி ஒன்றை பரிசாக அணிவித்தார். சூர்யா மற்றும் பிருந்தா இருவரும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து கூறிய சிவகுமார்
சிவகுமார் நடிப்பில் வந்த அன்னக்கிளி படத்திற்கு தான் இசையமைப்பாளர் இளையராஜா முதல் முறையாக இசையமைத்தார். இந்தப் படம் தான் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தது. இந்த ப்படத்தைப் போன்று நான் பாடும் பாடல், சிந்து பைரவி, ஆனந்த ராகம், பாச பறவைகள், ஒருவர் வாழும் ஆலயம் என்று பல சிவகுமாரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 80 வயதிலும் இசை மீது உள்ள காதலால் இசைத்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இளையராஜா இதுவரை 1000-தீர்க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 15,000-திற்கும் மேற்பட்ட பாடல்களையும் இசையமைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜாவுக்கு விழா எடுக்கும் தமிழக அரசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!