Anna Serial: ஆசிட் கலந்த தண்ணீரால் வெந்து போன கால்; பரணியை ஏத்திவிடும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட் !

Published : Mar 19, 2025, 03:47 PM IST

ஜீ தமிழ் சீரியலில் திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் பிரைம் தொடரான 'அண்ணா' சீரியல் அப்டேட் குறித்து பார்க்கலாம்.  

PREV
15
Anna Serial: ஆசிட் கலந்த தண்ணீரால் வெந்து போன கால்; பரணியை ஏத்திவிடும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட் !

அதிகமான குடும்ப ரசிகர்களால், பார்த்து ரசிக்கப்படும்,  அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில், சண்முகம், திட்டம் போட்டு சௌந்தரபாண்டியை காவடி தூக்க வைத்த நிலையில், இன்று சௌந்தரபாண்டி காவடி எடுத்ததும்,  காலுக்கு மஞ்சள் தண்ணீரை ஊற்ற வருகிறார்கள். சௌந்தரபாண்டி அதான் காவடி தூக்கிட்டேனே... இனிமே அதெல்லாம் எதுக்கு என கேட்கிறார். இதற்க்கு சண்முகம் உங்களுக்காக வழக்கத்தை மாற்ற முடியாது என கூறி பதிலடி கொடுக்கிறான்.

25
ஆசிட் தண்ணீர் பட்டு வெந்து போன பாண்டியம்மாவின் கால்

இசக்கி தண்ணீரை ஊற்ற, சௌந்தரபாண்டி காலில் தண்ணீர் படாமல் எகிறி குதித்து விட ஆசிட் கலந்த தண்ணீர் பாண்டியம்மா காலில் படுகிறது. உடனே பாண்டியம்மா ஐயோ எரியுதே என, கால் வெந்து போய் கத்துகிறார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் இது வெறும் மஞ்சள் தண்ணீர் தானே... என சொல்ல  அதெல்லாம் சொன்னா புரியாது அனுபவிச்சாதான் வலி தெரியும் என கூறுகிறாள். 

Anna Serial: சண்முகத்துக்கு ஆப்பு வைக்க நினைத்து; பிரச்சனையில் சிக்கிய சௌந்தரபாண்டி! அண்ணா சீரியல் அப்டேட்!

35
நேர்த்திக்கடனை செலுத்திய சண்முகம்

ஒருவழியாக தன்னுடைய தங்கையின் குழந்தைக்காக வேண்டிக்கொண்டது போல், சண்முகமும் காவடி எடுத்து கொண்டு நல்லபடியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை முடிக்கிறான் . இசக்கி தன்னுடைய அண்ணன் தன் மீது வைத்துள்ள பாசத்தை நினைத்து எமோஷனலாகிறாள். சண்முகம், இது ஒரு தாய் மாமனா என்னுடைய கடமை ஒரு தாயாக மாறி இசக்கிக்கு ஆறுதல் சொல்கிறான். 

45
சண்முகத்தை பழிவாங்க துடிக்கும் சௌந்தரபாண்டி

அடுத்ததாக அலகு குத்தியதால் பேச முடியாமல் இருக்கும் சௌந்தரபாண்டி, வழக்கம் போல  அந்த சண்முகத்தை சும்மா விட கூடாது, என சனியனிடம் ஆவேசமாக சைகையில் சொல்ல... ஆரம்பத்தில் இருந்து இதை தான் சொல்லிட்டு இருக்கீங்க ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டுது என அவனும் சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுவது போல சொல்கிறார்.

Anna Serial: சௌந்தரபாண்டி சூழ்சியால் சண்முகத்துக்கு ஏற்பட்ட ஆபத்து? அண்ணா சீரியல் அப்டேட்!

55
அமெரிக்கா போவதில் பிடிவாதம் காட்டும் பரணி

பரணி ஒரு பக்கம் அமெரிக்கா போக வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் நிலையில், இவருக்கு  விசா இன்டெர்வியூ அட்டென்ட் பண்ண சென்னைக்கு வர சொல்லி கடிதம் வர, பணியை வைத்து எப்படியும் சண்முகத்தை பழி தீர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில், பரணியை சென்னைக்கு அனுப்பி அப்படியே அமெரிக்கா அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். பரணியும் சௌந்தர பாண்டியிடம், அமெரிக்காவுக்கு செல்வதில் உறுதியாக இருப்பதாகவும், தன்னுடைய முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள காத்திருப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories