நடிகர் தனுஷ் திருமணத்திற்கு, பிறகு அமலா பால் வீடே கதி என்று இருந்ததாகவும், ரஜினிகாந்த் அவரது வீட்டிற்கு சென்று அவரை எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியானதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறிய பிளாஷ் பேக் தகவல் பற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் விவாகரத்துக்கு, கருத்து வேறுபாடு காரணமாக சொல்லபட்டாலும் அதற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பது மறைக்கப்பட்ட செய்தியாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தனுஷ் வாழ்க்கையிலும் நடித்திருக்கிறது. அதற்கு அமலா பால் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
25
திருமணமான சில வருடத்திலேயே விவாகரத்து பெற்ற அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். மைனா, தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, வேலையில்லா பட்டதாரி 2, ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த நிலையில்.. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பிறகு அமலா பாலிற்கு எந்த படமும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த சமயத்தில் தான் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அமலா பால் மற்றும் தனுஷ் இடையே ஒரு நெருக்கமான நட்பு இருந்ததாக கிசு கிசு பரவியது. இது குறித்து சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான செய்யாறு பாலு கூறிய தகவல் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனுஷ் பற்றி அவர் கூறுகையில்... "தனுஷ் கில்லாடிக்கு கில்லாடி. ஆளு தான் சைலண்டு. ஆனால், கொஞ்சம் சில்மிஷக்காரர் தான். திருமணத்திற்கு பிறகு அவர் வீட்டிற்கே செல்லாமல் எப்போதும் அமலா பால் உடனே இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையில் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. இந்த விவகாரம் ரஜினி காதுக்கு எப்படியோ போக, அவரும் வேறு வழியில்லாமல் அமலா பால் வீட்டிற்கு சென்று எச்சரித்துள்ளார். தனுஷிற்கு கல்யாணம் ஆகி குழந்தை, குடும்பம் இருக்கிறது. இனிமேல் இப்படி நடக்க கூடாது. மீறி நடந்தால் என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும் என்று அமலா பாலை எச்சரித்துள்ளார் ரஜினிகாந்த் என்று அவர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதற்கு அமலா பாலும் சும்மா விடவில்லை. உங்களது மருமகனை கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் இங்கு வந்து கேட்க கூடாது என்று பதிலுக்கும் பேசியிருப்பதாக அவர் கூறியுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து தற்போது வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனுஷ் இப்போது தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படமாக 'தேரே இக்ஸ் மெயின்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்55 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.