Anirudh Refused to Compose CSK Theme Music : தமிழ் திரையுலகில் செம பிசியாக இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் அனிருத், கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு இசையமைத்திருந்தார். இதையடுத்து அனிருத் இசையில் கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
25
Anirudh
கூலி படத்தை தொடர்ந்து அனிருத் கைவசம் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜன நாயகன் திரைப்படத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால், இப்படத்திற்காக ஸ்பெஷலாக பல பாடல்களை கம்போஸ் செய்து வருகிறாராம் அனிருத்.
35
Anirudh CSK Fan
இவ்வளவு பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு தீம் மியூசிக் போட்டுக் கொடுக்க மறுத்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக தீவிர ரசிகராம். ஃபேன் ஆக இருந்து சிஎஸ்கே-விற்கு அனிருத் தீம் மியூசிக் போட மறுத்ததன் பின்னணியில் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாட இரண்டு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த தடைக்காலம் முடிந்து மீண்டும் 2018-ம் ஆண்டு கம்பேக் கொடுத்த சிஎஸ்கே கோப்பையையும் வென்று அசத்தியது. அப்போது சிஎஸ்கே நிர்வாகத்தினர் அனிருத்திடம் தங்கள் அணிக்கு தீம் மியூசிக் ஒன்றை கம்போஸ் செய்து கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் அனிருத் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்.
55
Anirudh says no to CSK Theme Music
சிஎஸ்கே என்றாலே நமக்கு நினைவில் வருவது விசில் போடு பாடல் தான். அந்த பாடல் கேட்டால் எனக்கே புல்லரிக்கும். அந்த தீம் மியூசிக்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த தீம் மியூசிக் உருவாக்கிய மேஜிக்கை என்னால் ஈடுகட்ட முடியாது. எப்படி ரஜினி சாருக்கு அண்ணாமலை தீம் மியூசிக்கோ அதேபோல் சிஎஸ்கேவுக்கு விசில் போடுதான் இருக்க வேண்டும். அது ரசிகர்கள் மத்தியிலும் வேறலெவலில் ரீச் ஆகிவிட்டது. அதனால் என்னால் மீண்டும் ஒரு தீம் மியூசிக் போட முடியாது என கூறி மறுத்திருக்கிறார் அனிருத். சிஎஸ்கே-விற்காக விசில் போடு பாடலை உருவாக்கியது ஒரு சுயாதீன இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.