Keerthy Suresh’s Jackpot Deal Remains a Secret – Fans Eager for Official Reveal! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து கரம்பிடித்தார் கீர்த்தி. இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ, நடிகை திரிஷா உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி.
24
Keerthy Suresh Husband
கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட்டை காட்டிலும் பாலிவுட்டில் தான் பிசியாக நடிக்கிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான பேபி ஜான் என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பேபி ஜான் திரைப்படம் தமிழில் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும். பேபி ஜான் படத்தை அட்லீ தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
பேபி ஜான் படம் தோல்வி அடைந்தாலும் அதில் கீர்த்தியின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு வழங்கி வருகிறார்களாம். அந்த வகையில் தற்போது அக்கா என்கிற வெப் தொடரில் நடித்திருக்கிறார் கீர்த்தி. அந்த வெப் தொடர் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசரில் மாஸ் லுக்கில் காட்சியளித்தார் கீர்த்தி. இது வரலாற்று கதையம்சம் கொண்ட வெப் தொடராக உருவாகி இருக்கிறது.
44
Keerthy Suresh New Movie
இதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷுக்கு மற்றுமொரு ஜாக்பாட் வாய்ப்பும் பாலிவுட்டில் கிடைத்துள்ளதாம். அவர் இந்தியில் உருவாகும் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். ஆனால் அதுபற்றி வெளியில் வாய்திறக்காமல் கப் சிப்னு இருக்கிறார் கீர்த்தி. அவர் ரகசியமாக பொத்தி பொத்தி பாதுகாத்த இந்த விஷயம் தற்போது லீக் ஆகி உள்ளது. ஆனால் அவருடன் யார் நடிக்கிறார்கள், அப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற விவரங்கள் மிகவும் சீக்ரெட்டாகவே உள்ளதாம். விரைவில் தான் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த குட் நியூஸை கீர்த்தி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.