நீக் படத்திற்கு முன்னதாக தனுஷ் கடைசியாக இயக்கி நடித்த படம் ராயன். உலகளவில் ராயன் படம் 150 கோடிக்கு மேல் வசூலித்தது. ராயன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானபோதும் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷ் உடன் அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இதையும் படியுங்கள்... தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அழைத்த வெற்றிமாறன்; நோ சொன்ன சிறகடிக்க ஆசை நாயகி!