MS Bhaskar
கடந்த 2019ம் ஆண்டு பிரபல கானா இசை பாடகி இசைவாணி பாடிய பாடல் கடந்த சில நாட்களாகவே மிகப்பெரிய சர்ச்சைகளில் ஏற்படுத்தி வருகிறது. பிரபல இயக்குனர் ரஞ்சித் தலைமையில் செயல்பட்டு வருவது தான் "காஸ்ட்லெஸ் கலெக்ஷன்ஸ்" என்கின்ற இசைக்குழு. இந்நிலையில் இந்த இசைக் குழுவில் பங்கேற்றபோது தான் கடந்த 2019 ஆம் ஆண்டு "ஐ எம் சாரி ஐயப்பா.. நான் உள்ள வந்த என்ன தப்பா?" என்கின்ற வரிகளைக் கொண்ட பாடலை ஒரு மேடையில் பாடியிருந்தார் இசைவாணி. இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அண்மையில் இந்த பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாக தொடங்கியது. இந்த சூழலில் தான் இசைவாணி மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு குரல் கிளம்பியது.
சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து கெத்து நடிகை சுவாஷிகா!
Ayyappan Song
குறிப்பாக தமிழக பாஜக கட்சியை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் திரு. ராஜா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் "கஸ்தூரியை கைது செய்ய முனைப்பு காட்டி ஹைதராபாத் வரை சென்று அவரை கைது செய்த தமிழக காவல்துறை, ஏன் இன்னும் இசைவாணியை கைது செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். பிரபல இயக்குனர் மோகன் ஜி-யும் அதே கருத்தை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இசைவாணியின் மீது தவறு இல்லை என்றும், அவருடைய சார்பாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறியும் பா.ரஞ்சித் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
Pa Ranjith
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், இசைவாணி பாடிய இந்த பாடல் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இசைவாணிக்கு ஆதரவாக சிலர் பேசி வந்தாலும், அவர் பாடிய இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் மிகச் சிறந்த குணசித்திர நடிகரான எம்.எஸ் பாஸ்கர் கடுமையான சில எதிர்ப்புகளை முன் வைத்திருக்கிறார்.
Actor MS Bhaskar
அவர் வெளியிட்ட அறிவிப்பில் நான் எம்.எஸ் பாஸ்கர் பேசுகிறேன் "இசைவாணி பாடிய பாடலை கேட்டேன் நல்ல குரல் வளம். ஆனால் இசைவாத்தியங்களில் இசை அதிகமாக இருந்ததால் அவருடைய பாடல் வரிகள் சரிபட கேட்கவில்லை. அவர் பாடிய பாடலை சபரிமலை அருகே மேடை இட்டு பாடினால், இவர்களுக்கு சிறப்பான "பூஜை" கிடைக்கும். நான் சிறுவயதில் சபரிமலை இருமுடி கட்டும் பொழுது, என் சகோதரர் வாய்க்கரிசி வாங்கி செல்வதை பார்த்திருக்கிறேன்.
இவர்களும் இவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் இடமிருந்து அதுபோல வாய்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தட்டும். பிற மொழிகளிலும் இதே பாடலை பாடட்டும் அப்போது எல்லா மொழியினரும் அவருக்கு நல்ல பரிசுகளை தருவார்கள்" என்று கூறிய அவர். இறுதியாக "ஐ அம் சாரி ஐயப்பா அறிவுபுகட்டி அனுப்பப்பப்பா" என்று கூறியிருக்கிறார்.
ஒற்றை வீடியோவால் கேரியரே குளோஸ்; விஜய்யுடன் அப்படி ஒரு காட்சியில் நடித்த நடிகையா இது?