சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து கெத்து நடிகை சுவாஷிகா!

First Published | Nov 30, 2024, 4:07 PM IST

Swasika Join With Suriya 45 Movie : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45ஆவ படத்தில் லப்பர் பந்து நடிகை சுவாஷிகா முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Suriya 45 Starts with a Pooja Ceremony

Swasika Join With Suriya 45 Movie : ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர் சூர்யா இப்போது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார். கங்குவா படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நிலையில் வெளியானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்தது. சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அவருக்கு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டது என்று சினிமா விமர்சகர்கள் விமர்சித்து உள்ளனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா படமானது உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக குவித்து வருகிறது. இன்னும் ரூ.110 கோடியை கூட நெருங்கவில்லை.

Lubber Pandhu Actress Swasika

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா 44ஆவது படம் உருவாகி வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், பிரேம் குமார், ராம்சந்திரன் துரைராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சரண் ஒரு பாடலுக்கு வருகிறார். சூர்யாவின் 44ஆவது படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Tap to resize

Swasika Filmography

இந்தப் படத்திற்கு பிறகு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 45ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஆன்மீகம் தொடர்பான கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்திருந்த நிலையில் இந்தப் படமும் ஒரு சாமியை மையப்படுத்தி இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். சூர்யா45 படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் நிலையில் தற்போது லப்பர் பந்து நடிகை சுவாஷிகாவும் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், முக்கியமான ரோலில் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Swasika Join With Suriya 45 Movie

வாகை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுவாஷிகா, கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் கானாததும், சோக்காலி, அப்புச்சி கிராமம், பிரபா என்று பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த லப்பர் பந்து படம் மட்டுமே நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்க காத்திருந்த சுவாஷிகாவிற்கு இந்தப் படம் அதற்குரிய வாய்ப்பை கொடுத்தது.

லப்பர் பந்து படம் மூலமாக பட்டி தொட்டியெங்கும் அறியும் ஒரு நடிகையாக வலம் வந்தார். கெத்தோட மனைவியாக ஜொலித்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு தற்போது சூர்யா 45 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Latest Videos

click me!