Chandra Mohan : திரையுலகில் மீளமுடியாத சோகம்! பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்!

First Published | Nov 11, 2023, 11:29 AM IST

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள, நடிகர் சந்திரமோகன் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தெலுங்கு திரையுலகில்,1966 ஆம் ஆண்டு "ரங்குலா ரத்தினம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமோகன். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்திய சந்திரமோகனுக்கு, இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மாநில நந்தி விருது கிடைத்தது.

1970கள் மற்றும் 1980களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்ட இவரின் பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, இவரை முன்னணி நடிகராகவும் உயர்த்தியது. இவர் தமிழில் ஸ்ரீப்ரியா நடித்திருந்த நீயா படத்தில் அவருக்கு ஜோடியாக இச்சாதாரி நாகமாக நடித்திருந்தார். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ராதிகா என பல நடிகைகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

Maya Lesbian: மாயா ஒரு லெஸ்பியன்.. சுசித்ரா சொன்னது உண்மையா? உண்மையை உடைத்த பிரபல பாடகியின் பரபரப்பு அறிக்கை!

Tap to resize

கடந்த சில வருடங்களாக தெலுங்கு சினிமாவில், தாத்தா, அப்பா, போன்ற வலிமையான குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு, சமீப காலமாக வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை 9:45 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82, இவரின் மனைவி ஜலந்தரா ஒரு எழுத்தாளர் ஆவர். இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரின் இழப்பு தற்போது தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரை மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி, பலருக்கு உதவும் உள்ளம் கொண்டவராகவும் இருந்தார் சந்திரமோகன். நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு பலவகையில் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!