டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு, தற்போது வயது 39 ஆகிறது. இருப்பினும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் சிம்பு. இதில் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை சிம்பு உருகி உருகி காதலித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு, தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார்.
தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... தாறுமாறு சாதனை செய்த சூர்யாவின் மோஷன் போஸ்டர்..! சும்மா அதிர விடும் ரசிகர்கள்.!
இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணம் என்ன என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு, சமீபகாலமாக எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வ்ருகின்றன. நான் அவரை காதலிக்கிறேன், இவரை திருமணம் செஞ்சுகிட்டேன் என்றெல்லாம் கூட பரப்புகிறார்கள்.
நான் 19 வயசுல இருந்தே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன். மகனை திருமணகோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும், அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள். ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக உள்ளது.
அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என்று பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்கிற பயத்தால்தான் நான் திருமணத்தை தள்ளிப்போடுகிறேன். எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருக்கலாம் என்று நான் முடிவு பண்ணிருக்கேன்” என சிம்பு கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... இதுவே முதல் முறை...! நயன்தாராவுக்காக விக்கி இப்படி இறங்கிட்டாரே பாஸ்..! வைரல் போஸ்ட்..