தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரானை ஓட ஓட விரட்டிய வீர தீர சூரன்!

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி போட்டி போட்டு ரிலீஸ் ஆன வீர தீர சூரன் மற்றும் எம்புரான் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Veera Dheera Sooran Beat Empuraan in Tamilnadu Box Office : சியான் விக்ரமின் 62-வது படம் வீர தீர சூரன். இப்படத்தை அருண்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் விக்ரம் உடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ், பிருத்வி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த மார்ச் 27ந் தேதி ரம்ஜான் விடுமுறையில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு போட்டியாக வெளிவந்த மற்றொரு படம் எம்புரான்.

எம்புரான் vs வீர தீர சூரன்

எம்புரான் திரைப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி இருந்தார். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், சூரஜ், டொவினோ தாமஸ், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு விக்ரமின் வீர தீர சூரனுக்கு நிகரான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வசூலில் எம்புரானை விட பல மடங்கு அதிகம் வசூலித்துள்ளது வீர தீர சூரன்.

இதையும் படியுங்கள்... 17 காட்சிகளுக்கு கத்திரி போடும் எம்புரான் படக்குழு - காரணம் என்ன?


எம்புரான் வசூல்

எம்புரான் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.1.94 கோடி வசூலித்திருந்தது. இதையடுத்து போகப் போக அப்படத்தின் வசூல் மளமளவென குறையத் தொடங்கியது. இதனால் ஐந்து நாட்களில் அப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.6 கோடி வசூலித்து இருக்கிறது. ஆனால் உலகளவில் வசூலில் பட்டைய கிளப்பி வரும் எம்புரான் திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதிவேகமாக 200 கோடி வசூலித்த படம் என்கிற சாதனையையும் எம்புரான் படைத்துள்ளது.

வீர தீர சூரன் வசூல்

தமிழ்நாட்டில் முதல் நாள் லேட்டாக ரிலீஸ் ஆன வீர தீர சூரன் திரைப்படம் அன்றைய தினம் இரண்டே ஷோக்களில் ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்தது. போகப் போக பிக் அப் ஆன இப்படம் இரண்டாம் நாளில் ரூ.2.95 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.4.44 கோடியும், நான்காம் நாளில் ரூ.5.11 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 3.52 கோடியும் வசூலித்து இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.19 கோடி வசூலித்திருக்கிறது. இதன்மூலம் எம்புரானை விட 3 மடங்கு அதிகம் வசூலித்துள்ளது. மேலும் இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரவுண்டு கட்டிய ரசிகர்கள்; சட்டென ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு ஜூட் விட்ட விக்ரம் - வீடியோ இதோ

Latest Videos

click me!