அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள 'துணிவு' திரைப்படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் இன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலின் படி... 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும், 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு, அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் டிரைலர்.. இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'வாரிசு' படத்தின் டிரைலரும் வெளியாகும் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின், ட்ரைலர் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவில்லை என்றாலும், அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.