கன்னட நடிகையான ராஷ்மிகா கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது தெலுங்கு சினிமா தான். குறிப்பாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இவரது நடிப்பு வேறலெவலில் ரீச் ஆனது.
26
இதன்மூலம் அவருக்கு அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சரிலேரு நீகேவாரு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த இவர், பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
36
பின்னர் பிறமொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கிய ராஷ்மிகா, கடந்தாண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.
அதன்படி மிஷன் மஜ்னு என்கிற படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்து முடித்த ராஷ்மிகாவுக்கு, அப்படம் ரிலீசாகும் முன்பே அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து குட் பாய் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
56
இதுதவிர அவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
66
இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா, அதற்கு படு கவர்ச்சியான உடை அணிந்து வந்தது கவர்ச்சியில் அதகளப்படுத்தி உள்ளார். ரெட் ஹாட் உடையில் தொடை அழகு முழுவதும் தெரிய அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.