ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே கமர்ஷியல் ஹிட் கொடுத்த அட்லீக்கு, அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் தெறி திரைப்படம். விஜய்யின் தீவிர ரசிகனான அட்லீ, அப்படத்தை இயக்கி இருந்தார் என்று சொல்வதைவிட விஜய்க்காக பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு சீனும் செம்ம மாஸாக எடுத்திருந்தார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தெறி படத்தின் பணியாற்றியபோதே அட்லீ செய்த வேலையை பார்த்து வியந்துபோன விஜய், அடுத்தடுத்து தான் நடித்த மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. இவ்வாறு விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
இயக்குனர் அட்லீ கடந்த 2014-ம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி, சமீபத்தில் குட் நியூஸ் சொன்னது. அதன்படி பிரியா கர்ப்பமாக இருப்பதாக கூறி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் அட்லீ.