இயக்குனர் மணிரத்னம் மற்றும் பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம், அமோக வெற்றியை பெற்றதோடு, விருதுகளையும் வென்று குவித்தது.
தற்போது சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதா கொங்கரா. இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா, முதன்முறையாக கார் ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளார். Audi நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சொகுசு காரை வாங்கியுள்ள அவர், அந்த காரில் தன்னுடைய குருவான மணிரத்னம் மற்றும் தனக்கு பிடித்த நபர்களான சூர்யா, ஜிவி பிரகாஷ் மற்றும் 2டி நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகரபாண்டியன் ஆகியோருடன் ஜாலியாக ரைடு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றனர். அந்த காரின் விலை ரூ.1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியா? மேட்சிங்... மேட்சிங்... உடையில் தங்க சிலை போல் நயனுடன் போஸ் கொடுத்த டிடி!