நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, ஓரிரு... படங்கள் மட்டுமே நடித்து விட்டு திரையுலகில் இருந்து விலகி, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் குழந்தை - குடும்பம் என செட்டில் ஆன வனிதா, முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, இரண்டாம் திருமணம் செய்து கொண்டது... பின்னர் சில காதல் சர்ச்சைகள், குடும்ப பிரச்சனை, பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம் என பரபரப்பாக பேசப்பட்டவர்.
வனிதா திரையுலகில் இருந்து விலகி, பல வருடங்கள் ஆன நிலையில்... மீண்டும் இவருக்கான லைம் லைட்டை ஏற்படுத்தி கொடுத்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் சில கொளுத்தி போடும் வேலைகளை செய்தாலும், சிறப்பாக தன்னுடைய விளையாட்டை விளையாடினார் வனிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர், குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் பட்டத்தையும் கைப்பற்றினார். மேலும் தற்போது, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவது மட்டும் இன்றி, ட்ரெஸ் ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வனிதா எந்த அளவுக்கு பிரபலமோ... அதே அளவுக்கு வனிதாவின் மகள் ஜோவிகாவும் யூடியூபில் மிகவும் பிரபலம். அம்மா வனிதாவை பீட் செய்யும் அளவிற்கு சமையல் செய்து, வீடியோக்களை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் தன்னுடைய 18-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஜோவிகாவின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக பார்க்கப்பட்டது.
நெட்டிசன்கள் பலர், அடுத்த ஹீரோயின் தயாராகி விட்டதாக கமெண்ட் போட்டு வந்த நிலையில், வனிதாவும் தன்னுடைய மகள் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கு சொந்தமான நடிப்பு பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியும் பெற்றுள்ளதாக கூறி இருக்கிறார். ஜோவிகா படித்த இந்த பயிற்சி பள்ளியில் தான், தற்போது பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா, வருண் தவான் ஆகியோர் பயின்றதாகவும் வனிதா தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னுடைய மகளுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், நல்ல கதை அமைந்தால்... விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் நிற்பது போன்ற புகைப்படத்தை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலர் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாரா? சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜோவிகா 18 வயதை எட்டி விட்டதால்... பிக்பாஸ் செல்ல வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.