முட்டாள்கள் ... நயன் - விக்கி வாடகைத்தாய் சர்ச்சை குறித்த விமர்சனம்..! வெளுத்து வாங்கிய வனிதா விஜயகுமார்!

Published : Oct 11, 2022, 11:39 PM IST

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. பலர் இதுகுறித்து விமர்சித்து வரும் நிலையில், வனிதா விஜயகுமார் நயன் - விக்கிக்கு ஆதரவாக ட்விட் செய்து விமர்சனம் செய்தவர்களை வெளுத்து வாங்கி உள்ளார்.  

PREV
16
முட்டாள்கள் ... நயன் - விக்கி வாடகைத்தாய் சர்ச்சை குறித்த விமர்சனம்..! வெளுத்து வாங்கிய வனிதா விஜயகுமார்!

மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில், வான்டடாக வந்து கருத்து கூறும் சில பிரபலங்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். ஆனால் எதை பற்றியும், யாரை பற்றியும் கவலை கொள்ளாமல்... தன்னுடைய மனத்தில் பட்டத்தை பளீச் என கூறி விடுவார். இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அதை பற்றியும் கவலை படாதவர்.
 

26

அந்த வகையில், தற்போது ஒட்டு மொத்த திரையுலகினர் மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும்... திருமணமான 4 மாதத்தில், வாடகை தாய் மூலம் பெற்று கொண்ட விவகாரம் தான். 

மேலும் செய்திகள்: அஜித்தின் 'துணிவு' படப்பிடிப்பு நிறைவு..! வெளியான மற்றொரு மாஸ் அப்டேட்..!
 

36

இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. மீறி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் குழந்தை பெற்று கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக திருமணம் ஆகி 5 வருடங்கள் நிறைவடைந்திருப்பது  அவசியம், இதனால் நயன் மற்றும் விக்கி இருவரும், விதிமுறைகளை மீறினார்களா? என்கிற சர்ச்சை ஒருபக்கம் எழுந்துள்ளது.
 

46

இப்படி பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், இது குறித்து விமர்சிப்பவர்களுக்கு வனிதா விஜயகுமார் ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார். முட்டாள்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம், வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: அதிர்ச்சி... குளிக்க சென்றபோது இளம் நடிகருக்கு நேர்ந்த சோகம்..! கோவில் குளத்தில் மூழ்கி பலி..!
 

56

மேலும் வாடகைத்தாய் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எங்களுக்கும் லீகல் தெரியும், எங்களுக்கும் மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் நேரத்தை வீணாக்கி வருகிறீர்கள், ஆனால் நீங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
 

66

 அதே நேரம் வாடகைத்தாய் குறித்த விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலா நயன்தாரா- விக்னேஷ் தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றிருப்பார்கள் என வனிதா விஜயகுமாரின் பதிவை பலர் வரவேற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: Nayanthara: நயன் மீது ஏற்கனவே செம்ம கடுப்பு... இப்போ வெளியில் தலைகாட்ட முடியல? குமுறும் விக்கி உறவினர்கள்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories