அஜித் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவு வருகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து, 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாகவும் அஜித் இணைந்துள்ளதால் 'துணிவு' படத்தை படு மாஸாக வரவேற்க கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத், சென்னை, விசாகபட்டினர் போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் செப்டம்பர் மாதம் பாங்காக் சென்றனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்து, இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'துணிவு' திருப்பிடம் ஒரு ஹீஸ்ட் த்ரில்லராக உருவாகியுள்ள நிலையில் இதில் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், தெலுங்கு நடிகர் அஜய், பிக்பாஸ் பிரபலன்களான பாவனி, அமீர், சிபி சக்கரவர்த்தி போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, வேலு குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.