அச்சு அசல் பில்லா நயன்தாராவை போல் மாறி; வாணி போஜன் நடத்திய வேறலெவல் போட்டோஷூட்

Published : Nov 24, 2024, 12:15 PM IST

பில்லா படத்தில் வரும் நடிகை நயன்தாராவை போல் ஸ்டைலிஷ் கெட்டப்பில் நடிகை வாணி போஜன் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
15
அச்சு அசல் பில்லா நயன்தாராவை போல் மாறி; வாணி போஜன் நடத்திய வேறலெவல் போட்டோஷூட்
vani bhojan, Nayanthara

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து பேமஸ் ஆனார். சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் வாணி போஜன். சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது ஓ மை கடவுளே திரைப்படம் தான். இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

25
vani bhojan

ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். முன்னணி ஹீரோக்களின் படமாக இருந்தாலும் கதையில் தனக்கு ஸ்கோப் உள்ளதா என்பதை உறுதிசெய்த பின்னரே நடிக்க கமிட்டாகி வருகிறார் வாணி போஜன். தற்போது அவர் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... தனுஷை அசிங்கப்படுத்த நீலாம்பரியாக மாறி; கல்யாண வீட்டில் நயன்தாரா செய்த கலாட்டா!

35
vani bhojan Photos

ஓ மை கடவுளே படத்திற்கு பின்னர் லாக் அப், ராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை என ஏராளமான படங்களில் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறுகிறார் வாணி போஜன்.

45
vani bhojan latest Photos

இவர் சினிமா மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ட்ரிபிள்ஸ் என்கிற வெப் தொடரில் நடித்தார். இதுதவிர அருண் விஜய் உடன் தமிழ் ராக்கர்ஸ், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய அரசியல் கதையம்சம் கொண்ட வெப்தொடரான செங்களம், ராதா மோகனின் சட்னி சாம்பார் போன்ற வெப்தொடர்களில் வாணி போஜன் நடித்திருக்கிறார்.

55
vani bhojan Photoshoot

சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டி தூக்க நடிகைகள் கையாளும் யுக்தி போட்டோஷூட் தான். அந்த வகையில் நடிகை வாணி போஜனும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அதன்படி சமீபத்தில் பில்லா பட நயன்தாரா போல் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை வாணி போஜன் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  சிகரெட் பிடிப்பதை விட்டுவிட சொன்ன எம்ஜிஆர்.! ரஜினி சொன்ன ருசிகர சம்பவம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories