விமான பணிப்பெண்ணாக இருந்து சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, மீண்டும் சன் டிவியில் அசத்தலில் சுட்டீஸ், விஜய் டிவியில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் சீசன் 2 உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார்.
27
Vani bhojan photos
இதில் தெய்வமகள் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் மூலம்பட்டிதொட்டியெல்லாம் இவருக்கு ஏகபோக ரசிகர்கள் கிடைத்தனர். ஆனால் இந்த பிரபல நாடகத்திலிருந்து பாதியிலேயே விலகிய வாணி போஜன் ஓர் இரவு என்னும் தமிழ் படம் மூலம் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் அதிகாரம் 79 படத்தில் தோன்றிய இவர் பிரேம் படம் மூலம் தெலுங்கிற்கு அறிமுகமானார். நடித்த பின்னர் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னிஸ்யா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மஹான் உள்ளிட்ட படங்களில் இவர் தோன்றியிருந்தார்.
47
Vani bhojan photos
இதில் மஹான் படத்தில் இவர் நடித்த நீண்ட காட்சிகள் நீக்கப்பட்டதால் இவரது ரசிகர்கள் மண் வருத்தமடைந்தனர். அந்த படத்தில் கணவனுக்கு துரோகம் செய்து விக்ரமுடன் இவர் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவும் வைரலானது.
தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, ஊர் குருவி, ரேக்ளா, கொலைகார கைரேகைகள் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் வாணி போஜன். அதோடு வெப் சீரிஸிலும் பிசியாக இருக்கும் இவர் தற்போது அருண் விஜய் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் தொடர் சோனி லைவ்வில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பிரமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர் வாணி போஜன்.
67
Vani Bhojan
அதோடு தற்போது பரத் நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தில் நாயகியாக நடிக்கிறார் வாணி போஜன். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இதற்கிடையே அவ்வப்போது சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்தும் ரசிகர்களுடன் உரையாடியும் மகிழ்ந்து வருகிறார் வாணி.
அந்த வகையில் தற்போது இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேசையில் அமர்ந்திருக்கும் இவரின் சமீபத்திய அழகிய போஸ்களில் பார்ப்பதற்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.