உலக அளவில் 50 கோடி... அமெரிக்க பாக்ஸ் ஆபிஸியில் புதிய சாதனை படைத்த 'சீதா ராமம்' எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 15, 2022, 6:29 PM IST

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' திருப்பிடம் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ள நிலையில் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியான நிலையில், இப்படம் முழுவதும் 50 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முன்பதிவுடன் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து, புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்ற ‘சீதா ராமம்’ வெளியான முதல் வாரத்தில் இந்திய மற்றும் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் சாதனையை பதிவு செய்துள்ளது. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இருப்பினும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளம் என அனைத்து பகுதிகளிலும் இரண்டாவது வாரத்திலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. மேலும் சுதந்திர தின விடுமுறையான இன்றும் இப்படத்தில் வசூல் வேட்டை தொடரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு தரமான படைப்பிற்கு, மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என்பதற்கு , ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்: இளம் பெண்களை ஆபாசமாக பேச வைத்து மிரட்டி பணம் பரிப்பில் ஈடுபட்ட நடிகர் அதிரடி கைது!
 

Tap to resize

போருக்கு இடையில் நடைபெறும் காதல் கதையின் உணர்ச்சிகரமான பயணம் ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்திருக்கிறது.விமர்சகர்களும், பார்வையாளர்களும் இந்த காவிய காதல் படைப்பை ரசித்து வருகிறார்கள். அண்மையில் விமர்சனத்தையும், வசூலையும் ஒருமித்து பெற்ற படைப்பு என்றால் அது ‘சீதா ராமம்’ மட்டும் தான் என்பது, ரசிகர்கள் அளித்து வரும் தீர்ப்பு.  
 

முன்னணி கலைஞர்களான துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம், இயக்குநர் ஹனு ராகவபுடியின் தனித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம், விஷால் சந்திரசேகரின் அற்புதமான மயக்கும் இசை,பி. எஸ். வினோத்தின் வியக்க வைக்கும் காட்சி அமைப்பு, வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா பட நிறுவனங்களின் தரமான தயாரிப்பு, ஆகிய பல விசயங்கள் இணைந்து இப்படத்தை உன்னதமான படைப்பாக மாற்றி இருக்கிறது என கூறினால் அது மிகையல்ல.

மேலும் செய்திகள்: சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!
 

Latest Videos

click me!