அதோடு இந்த படத்திற்கு அதிகாலை காட்சியும் கிடைத்துள்ளது. மித்ரன் ஜஹவர் இயக்கியுள்ள இதில் தனுஷ், நித்யா மேனன், பிரியங்கா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... அருண் விஜய்யின் 'யானை' டிஜிட்டல் வெளியீடு... எப்ப தெரியுமா?
தங்கமகன் படத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அனிருத் - தனுஷ் கூட்டணி இந்த படத்தின் மூலம் மீண்டும் கலக்கி வருகிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ், அனிருத் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இடம்பிடித்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளது படக்குழு.