Published : Aug 15, 2022, 05:33 PM ISTUpdated : Aug 15, 2022, 05:36 PM IST
படப்பிடிப்பிலிருந்த போது ஸ்ரீதேவிக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டது. இருந்தும் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. மருந்துகளை உட்கொண்டு சரியான நேரத்தில் தனது பாகத்தை முடித்துக் கொடுத்தார் என சிம்பு தேவன் கூறியுள்ளார்.
16 வயதினிலே மயிலாக வந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்த நடிகை ஸ்ரீதேவி. இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். 1967 -ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கோலிவுட்டில் மட்டும் 70வதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான புலி தான் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம்.
25
sridevi
முன்னதாக ஸ்ரீதேவி நடிப்பில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் வெளியாகி இருந்தது. குடும்ப தலைவி தன் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. இதில் அஜித் காமியோவில் நடித்திருந்தார்.
சிம்பு தேவன் இயக்கத்தில் இவர் நடித்த புலி மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய் நாயகனாக நடித்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இருவர் நாயகிகளாக வந்திருந்தனர். இதில் ஹன்சிகாவின் தாயாகவும், வேதாள உலகத்தின் ராணியாகவும் ஸ்ரீதேவி நடித்திருந்தார். எதிர் நாயகியாக இவர் நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றது.
35
sridevi
சமீபத்தில் ஸ்ரீதேவியின் 59 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதையொட்டி புலி பட இயக்குனர் சிம்புதேவன் ஸ்ரீதேவியுடன் பணி புரிந்த அனுபவம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது தனது கதைக்கு ஏற்ற மிடில் ஏஜ் நடிகையை தேடியதாகவும், பின்னர் அந்த பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும் ஸ்ரீதேவியை கண்டறிந்ததாகவும் சிம்பு தேவன் கூறியுள்ளார்.
மேலும் எல்லா டிரெண்டுகளிலும் ஸ்ரீதேவி முதலிடத்தில் இருந்ததாகவும், கதையை அவரிடம் கூறியதும் புலி படத்தில் ஸ்கிரிப்ட் கூறியதும் கதை தனக்கு தனித்துவமாக இருப்பதாக கூறி ஸ்ரீதேவி ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் பணிபுரிந்த காலத்தை நினைவு கூர்ந்து இயக்குனர், ஸ்ரீதேவிக்கு சிறந்த தொழில் முறை நெறிமுறைகளுடன் பணியாற்றினார் என்றும், எப்பொழுதும் படப்பிடிப்பு நேரத்தை விட சில நிமிடங்களுக்கு முன்னதாகவே செட்டிக்கு வந்து விடுவார். கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் டூப் தேவையில்லை என்பதை என கூறியதாகவும், நடிகை தனது ஸ்டண்ட் காட்சிகள் ஆபத்தானதாக இருந்தாலும் எப்போதும் நடிக்க மறுத்ததில்லை என கூறியுள்ளார்.
55
sridevi
உதாரணமாக ஒரு சண்டை காட்சியை நினைவு கூர்ந்த இயக்குனர், படப்பிடிப்பிலிருந்த போது ஸ்ரீதேவிக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டது. இருந்தும் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. மருந்துகளை உட்கொண்டு சரியான நேரத்தில் தனது பாகத்தை முடித்துக் கொடுத்தார். பழம்பெரும் நடிகையின் கடைசி தமிழ் படத்தை இயக்கியது எனக்கு கிடைத்த பெருமை, ஸ்ரீதேவிக்கு பணிவு அதிகம். அவரது மறைவு தமிழ் சினிமா உலகுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் சீம்பு தேவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.