பின்னர் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டபோதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் திரையரங்குகளில் படம் பார்க்க தயக்கம் காட்டினர். இவ்வாறு களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக ரிலீசானது தான் விஜய்யின் மாஸ்டர் (Master) திரைப்படம். இப்படம் கடந்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.