Valimai Dialogue : ரஜினியை பங்கமாக கலாய்த்த அஜித்... புது சர்ச்சையை கிளப்பிய வலிமை வசனம்

Ganesh A   | Asianet News
Published : Feb 25, 2022, 08:30 AM ISTUpdated : Feb 25, 2022, 08:31 AM IST

வலிமை படம் வசூலிலும் பட்டய கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பல்வேறு சாதனைகளை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

PREV
15
Valimai Dialogue : ரஜினியை பங்கமாக கலாய்த்த அஜித்... புது சர்ச்சையை கிளப்பிய வலிமை வசனம்

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள 2-வது படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார்.  குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

25

இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

35

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். வசூலிலும் இப்படம் பட்டயை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பல்வேறு சாதனைகளை படைக்கும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

45

இந்நிலையில், வலிமை (Valimai) படத்தில் அஜித் பேசிய வசனம் ஒன்று புது சர்ச்சையை கிளப்பி உள்ளது. படத்தில் தனது தம்பி மீது அஜித் நடவடிக்கை எடுக்கும் போது, அவரது தாய் கோரிக்கை ஒன்றை முன்வைப்பார். அப்போது பேசும் அஜித், ‛சிஸ்டம் சரியில்லைனு... நாம தான் சொல்றோம்... ஆனா, நமக்குனு ஒரு விஷயம் நடக்கும் போது, நமக்கு சாதகமா பேசுறோம்... சிஸ்டம்ங்கிறது யாரு? நாம தான் சிஸ்டம்’ என்று அவர் பேசியுள்ளார்.

55

இது ரஜினியை பங்கமாக கலாய்க்கும்படி இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. ஏனெனில் கடந்த 2017 ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி (Rajini), ‛‛தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இங்கு சிஸ்டம் சரியில்லை... மொத்தத்தையும் சரிசெஞ்சா தான் தமிழகம் உருப்படும்,’’ என்று பேசியிருந்தார். இப்படியெல்லாம் பேசிவிட்டு அரசியலுக்கும் வராத ரஜினி, சிஸ்டத்தையும் சரிசெய்யவில்லை. இதனை கலாய்த்து தான் வலிமை படத்தில் அஜித் (Ajith) பேசியுள்ளதாக புது சர்ச்சை வெடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Huma Qureshi : அஜித் ரசிகர்கள் செய்த செயலால் கண்ணீர் விட்டு அழுத வலிமை ஹீரோயின் ஹூமா குரேஷி

Read more Photos on
click me!

Recommended Stories