3 வருடத்தில் முடிவுக்கு வந்த காதல்... காதலனை பிரேக் அப் செய்து பிரிந்தார் வலிமை நாயகி...!

Published : Nov 02, 2022, 03:02 PM IST

தமிழில் ரஜினியுடன் காலா, அஜித்துடன் கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி காதல் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
3 வருடத்தில் முடிவுக்கு வந்த காதல்... காதலனை பிரேக் அப் செய்து பிரிந்தார் வலிமை நாயகி...!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான காலா படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார் ஹூமா. சற்று வயதான பெண்ணின் ரோல் அவருக்கு கிடைத்தாலும் அதில் நேர்த்தியாக நடித்திருந்தார்.

24

இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான வலிமை படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் ஹூமா குரேஷி. இப்படத்தில் அவரது துணிச்சலான வேடத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்பின் கோலிவுட்டில் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!

34

இவர் நடிப்பில் தற்போது டபுள் எக்ஸ்.எல். என்கிற இந்தி படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, மஹத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

44

டபுள் எக்ஸ்.எல். படத்தை முடாசர் அஜிஸ் என்பவருடன் இணைந்து தயாரித்து இருந்தார் ஹூமா குரேஷி. கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது பிரேக் அப் செய்து பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் காதலை முறித்துக் கொண்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய வடிவேலு... 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி..!

click me!

Recommended Stories