சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய வடிவேலு... 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி..!

Published : Nov 02, 2022, 02:16 PM ISTUpdated : Nov 02, 2022, 02:18 PM IST

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ‘தலைவர் 170’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. 

PREV
14
சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய வடிவேலு... 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, ஷிவ்ராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே அடுத்ததாக நடிக்க உள்ள 2 படங்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. அதில் ஒரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். மற்றொரு படத்தை இயக்க இரண்டு, மூன்று இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Meera Mithun: மீராமிதுன் படத்தை ஓட்ட இப்படி ஒரு பிளானா? அதிரடி முடிவெடுத்த படக்குழு..!

34

இந்நிலையில், ரஜினி - சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் உருவாக உள்ள ‘தலைவர் 170’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

44

ரஜினி - வடிவேலு கூட்டணிக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடித்துள்ள சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் காமெடி வேறலெவல் ஹிட் ஆகின. இதில் குசேலன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், அதில் இடம்பெறும் காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல... விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories