'விருமன்', 'பொன்னியின் செல்வன்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தி நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இரண்டு வாரங்களை கடந்த பிறகும், ரசிகர்களிடம் இந்த படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் P S மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.