குற்ற உணர்ச்சி; கண்கலங்கிய வைரமுத்து! ஜானகி வாழ்க்கையை திருப்பி போட்டதா? ஒற்றை வார்த்தை!

Published : Oct 22, 2024, 06:14 PM ISTUpdated : Oct 22, 2024, 09:09 PM IST

பின்னணி ஜானகி 'காதல் ஓவியம்' படத்தில் இடம்பெற்ற அறைச்சொல்லை நீக்குமாறு கேட்டும், அதற்க்கு  வைரமுத்து மறுத்த நிலையில், பின்னர் அவர் முன் குற்ற உணர்ச்சியில் கூனி குறுகி நின்றதாக தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  

PREV
15
குற்ற உணர்ச்சி; கண்கலங்கிய வைரமுத்து! ஜானகி வாழ்க்கையை திருப்பி போட்டதா? ஒற்றை வார்த்தை!
Negativity Words in song

பொதுவாக திரைப்பட பாடல்களில் இடம்பெறும் பாசிட்டிவான வார்த்தைகளை விட, எதிர்மறை தன்மை கொண்ட அறைச்சொற்களுக்கு வலிமை அதிகம் என சிலர் நம்புவார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர் இது போன்ற வார்த்தைகள் தன்னுடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் இருக்க  கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார். சூழல் காரணமாக இடம்பெற்றால் கூட, அந்த அறைசொல் தான் அந்த படத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என சொல்வாராம். ஒருமுறை தன்னுடைய படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாததற்கு கூட, வாலி பாடலில் எழுதிய அறைசொல் தான் காரணம் என எம்ஜிஆர் தன்னை திட்டியதாக வாலியே கூறியுள்ளார்.

25
TM Soundharrajan

அதே போல் மிகவும் பிசியாக பாடி வந்த, டி.எம்.சௌந்தர் ராஜன் கூட, டி.ராஜேந்தரின் படத்தில் இடம்பெற்ற 'என் கதை முடியும் நேரம் இது' என்கிற அறைசொல் பாடல் பாடிய பின்னர், வாய்ப்புகள் இல்லாமல் போனதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். 

நீ நினைக்குற பொண்ணு நான் இல்ல அர்னவ்! கையில் குழந்தையோடு பளார் என அறைவிட்ட திவ்யா ஸ்ரீதர்!

35
S Janaki

இதுபோல் வைரமுத்து எழுதிய ஒரு பாடலில் இடம்பெற்ற வார்த்தையை நீக்கிவிடுமாறு ஜானகி கேட்டும் அதை வைரமுத்து  நீக்க மறுத்து, பின்னர் குற்ற உணர்ச்சியால் அவர் முன் கலங்கி நின்றதாக கூறியுள்ளார். இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல் ஓவியம்'. இந்த படத்தில், கண்ணன் ஹீரோவாக நடிக்க, ராதா கதாநாயகியாக நடித்திருந்தார்.

உணர்வு பூர்வமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், வைரமுத்து மொத்தம் 6 பாடல்களை எழுதி இருந்தார் . அதில் ஜானகி "நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன் ராஜராகம் பாடும் நேரம்" என்கிற பாடலை சோலோவாக பாடி இருந்தார். 

45
Kadhal Oviyam

இந்த பாடலில், "அமுதகானம் நீதரும் நேரம்... நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே" 

என்கிற வரி இடம்பெற்றிருந்தது. இதில் விதவை என்கிற வார்த்தையை மட்டும் நீக்க முடியுமா என பலமுறை ஜானகி கேட்டும், படத்தின் கதைக்கு இந்த வரிகள் ஒத்து போவதால் இந்த வரியை நீக்க முடியாது என கண்டிப்பாக கூறி விட்டாராம். பின்னர் இந்த பாடலை அவர் பாடிய சில தினங்களையே ஜானகியின் கணவர் இறந்துபோய் உள்ளார்.

விஜய் டிவி சீரியல் ஹீரோயினுக்கு திடீர் என நடந்த திருமண நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

55
Vairamuthu Guilt Feel

பிரசாத் ஸ்டுடியோவில், ஜானகியை நெற்றியில் பொட்டு  இல்லாமல்... பார்த்த போது, குற்ற உணர்ச்சியில் கலங்கி போய் நின்றதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். அவரின் வாழ்க்கையில் நடந்த இந்த இழப்புக்கு அந்த வரிகள் தான் காரணமா? என்கிற ஒரு குற்ற உணர்ச்சி தனக்கு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories