கல்லூரி காலத்தில் இருந்தே, மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த மான்சி ஜோஷி, சிறந்த நடன கலைஞரும் ஆவார். டிக் டாக் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான இவருக்கு, ஆரம்பத்தில் கன்னட மொழி சீரியல்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழில் 2020-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அன்புடன் குஷி' தொடரில் நாயகியாக நடித்தார்.