விஜய் சேதுபதியிடம் வாங்கி கட்டிக்கொண்டு வெளியேறிய அர்னவ் பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 22, 2024, 1:19 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்தில் எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்ட சீரியல் நடிகர் அர்னவ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் டிவியில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது.

ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, அருண் பிரசாத், விஜே விஷால், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், கானா ஜெஃப்ரி, அர்னவ், அன்ஷிகா, ஆர் ஜே ஆனந்தி, தீபக், உள்ளிட்ட சுமார் 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், முதல் நாளே யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து, முதல் 24 மணி நேரத்தில் 'மகாராஜா' பட நடிகை சாச்சனா வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss 8 Contestant

பின்னர் அந்த வாரத்தின் இறுதியில், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சாச்சனா ரீ என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து முதல் வாரத்தில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்த சந்திரசேகர் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில், இவரைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் நாமினேஷன் லிஸ்டில் 10 பேர் பெயர் இடம் பெற்ற நிலையில், அவர்களின் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

பிரியா பவானி ஷங்கர் முதல் திவ்யா துரைசாமி வரை; செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய 5 பிரபலங்கள்!
 

Tap to resize

Bigg Boss Tamil Season 8 Second Eviction

மேலும் இரண்டாவது வாரத்தில், 'செல்லம்மா' சீரியல் நடிகர் அர்னவ் குறைந்த வாக்குகளுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்னவ், விஜய் சேதுபதி வாழ்த்து கூறி வீட்டுக்குள் செல்லும் போது கொடுத்த டிராஃபியை, மிகவும் கோபமாக கீழே வீசி உடைத்த நிலையில்... கடைசியாக போட்டியாளர்களிடம் பேச சொன்ன போது, கேர்ள்ஸ் டீம் நல்லா விளையாடுங்க, என கூறிவிட்டு, பாய்ஸ் டீமை பார்த்து 'டேய் நீங்கள் எல்லாம் என்னடா விளையாடுறீங்க? நல்லா ஜால்ரா போடுறீங்க, உங்களுக்கு ஜால்ரா நான் போடவில்லை என்று என்னை வெளியில் அனுப்பிவிட்டீர்கள் என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், விஜய் சேதுபதி அர்னவுக்கு புத்திமதி சொல்வது போல், இது உங்களுடைய வன்மத்தை கக்கும் இடம் இல்ல, கருத்து மட்டும் சொல்லுங்க என கூறினார்.
 

Vijay Sethupathi Alert Arnav

இதெல்லாம் நீங்க உள்ள பேசி இருக்கணும். அங்க விட்டுட்டு இங்க வந்து பேசுறது அநாகரீகம். தயவு செஞ்சு மரியாதையா பேசுங்க, அவங்க எல்லாம் என்னுடைய ஹவுஸ் மேட்ஸ் என விஜய் சேதுபதி பாய்ட்டாக பேசி அர்னவை பதற வைத்தார். இறுதியாக ஆண்கள் அணியினரை குரூப் ஆக விளையாட வேண்டாம் என சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

1330 திருக்குறளை விட உயர்ந்த பாடல்! எது தெரியுமா? என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதை பகிர்ந்த வாலி!
 

Arnav Bigg Boss Salary

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிய அர்னவ், இதுவரை எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அர்னவ் சீரியலில்  ஒரு நாளைக்கு ரூ.18000 வாங்கிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 20,000 இவருக்கு ஒரு நாளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இரண்டு வாரங்களுக்கு இவர் 2 லட்சத்து 80 ஆயிரம் பணத்தோடு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.
 

Latest Videos

click me!