டிடிஎப் வாசனின் காதலி ஷாலின் சோயா சொன்ன குட் நியூஸ்- குவியும் வாழ்த்து

First Published | Oct 22, 2024, 1:06 PM IST

TTF Vasan Lover Shaalin Zoya : யூடியூப்பர் டிடிஎப் வாசனின் காதலியும், நடிகையுமான ஷாலின் சோயா குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளதால் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்த வண்ணம் உள்ளது.

Shaalin Zoya, TTF Vasan

குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமாகி பின்னர் கேரளாவில் விஜேவாக பணியாற்றி வந்தவர் தான் ஷாலின் சோயா. இதையடுத்து தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜா மந்திரி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஷாலின் சோயா. அப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலின். இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளிவந்த கண்ணகி படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் ஷாலின் சோயா.

TTF vasan lover Shaalin Zoya

கண்ணகி படத்தில் ஷாலின் சோயாவின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் கிடைத்தன. இதையடுத்து சின்னத்திரைக்குள் எண்ட்ரி கொடுத்த ஷாலின் சோயா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஒரு சில எபிசோடுகளிலேயே எலிமினேட் ஆன இவர் பின்னர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பைனலுக்கு சென்றார். ஆனால் அவருக்கு நான்காம் இடம்தான் கிடைத்தது.

இதையும் படியுங்கள்... மஞ்சள் வீரனில் நீக்கம்; சீப் பப்ளிசிட்டிக்கு என்னை பயன்படுத்தினார் இயக்குனர் - பொங்கிய டிடிஎஃப் வாசன்!

Tap to resize

TTF Lover Shaalin Zoya

ஷாலின் சோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தது டிடிஎப் வாசன் தான். வாசன் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக கேரளாவில் டேட்டிங் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. டிடிஎப் வாசனின் காதலி என்பதால் சோசியல் மீடியாவிலும் ஷாலின் சோயா மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அவர் குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

Cooku With Comali Fame Shaalin Zoya

அதன்படி தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக ஷாலின் சோயா குறிப்பிட்டுள்ளார். அதுவேறெதுவுமில்லை, சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஷாலின் சோயா அது தற்போது நனவாகி இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Shaalin Zoya new home

இதுகுறித்து ஷாலின் போட்டுள்ள பதிவில், என்னுடைய வீடு, 20 வயதாகும் போது எப்போ நாம் பெரியவளாகி சம்பாதித்து புது வீடு வாங்குவோம் என்றும் என்றாவது பால்கனி உடன் கூடிய ஒரு சின்ன பிளாட் வாங்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. திருமணத்தை பற்றி நான் யோசித்ததே இல்லை. சொந்த வீடு என்பது ஒரு ரிட்டயர்மெண்ட் பிளான் மாதிரி, இந்த பயணத்தில் எனக்கு பக்க பலமாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... டிமிக்கி கொடுத்தாரா டிடிஎப்; மஞ்சள் வீரன் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டது ஏன்?

Latest Videos

click me!