"ராசியில்லாதவன்னு ஒதுக்குனாங்க" படம் கொடுத்து யுவனுக்கு கைகொடுத்த அஜித் - எந்த படம் தெரியுமா?

First Published Oct 22, 2024, 4:35 PM IST

Yuvan Shankar Raja : பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் அஜித்குமார் தனக்கு செய்த மாபெரும் உதவி குறித்து அண்மையில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Yuvan Shankar Raja

தமிழ் சினிமாவை பொருத்தவரை மிகப்பெரிய இசை குடும்பமாக திகழ்ந்து வருவது தான் இசைஞானி இளையராஜாவின் குடும்பம். அவருடைய தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரிணி, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா என்று அனைவருமே இசைத் துறையில் பயணிப்பவர்கள் தான். அண்மையில் அவருடைய ஒரே மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவர் ஒரு தேசிய விருது வென்ற பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும், இளைய இசைஞானியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

நீ நினைக்குற பொண்ணு நான் இல்ல அர்னவ்! கையில் குழந்தையோடு பளார் என அறைவிட்ட திவ்யா ஸ்ரீதர்!

yuvan shankar

கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான "அரவிந்தன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கினார் யுவன் சங்கர் ராஜா. அந்த முதல் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தாலும், தொடர்ச்சியாக அவருடைய இசையில் வெளியான பல திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. குறிப்பாக 1999ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் வெளியான "பூவெல்லாம் கேட்டுப்பார்" திரைப்படத்தில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானாலும், படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. 

Latest Videos


Yuvan

தொடர்ச்சியாக அவருடைய இசையில் வெளியான "உனக்காக எல்லாம் உனக்காக" மற்றும் சரத்குமாரின் "ரிஷி" போன்ற திரைப்படங்கள் வியாபார ரீதியாக பெரிய அளவில் ஹிட்டாகத நிலையில், யுவன் சங்கர் ராஜாவை ராசியில்லாத இசையமைப்பாளர் என்று பலரும் கூறியதாக அவரே அண்மையில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட என்னை இயக்குனர்கள் ஒதுக்கும் அளவிற்கு நான் தான் படங்களின் தோல்விக்கு காரணம் என்று பேசப்பட்டது. மிகப்பெரிய இசை மேதையின் மகனாக இருந்து கொண்டு, இப்படி ஒரு அவப்பெயரை வாங்கி விட்டேன் என்கின்ற கஷ்டம் என்னை பெரிய அளவில் வாட்டி வதைத்தது. அந்த சூழலில் எனக்கு கம் பேக் கொடுக்கும் விஷயமாக அமைந்தது ஒரு திரைப்படம்.

Dheena

அது தான் கடந்த 2000வது ஆண்டு பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான "தீனா" என்கின்ற திரைப்படம். தல அஜித் என்னுடைய வீட்டிற்க்கே வந்து அந்த திரைப்படத்திற்கு நான் தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக உன்னுடைய முழு திறமையையும் இந்த படத்தில் நீ காட்டியே ஆக வேண்டும் என்று எனக்கு ஊக்கம் அளித்தார். அந்த திரைப்படத்திற்கு நான் இசையமைத்தேன். படமும் சூப்பர் ஹிட் ஆனது. படத்தில் வெளியான பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு தான் என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகள் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்; மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் - இர்பான் மீது பாயும் நடவடிக்கை

click me!