பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா? வைரமுத்து இரங்கல்

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Vairamuthu mourns for the demise of Manoj Bharathiraja gan

Vairamuthu Condolence Message for Manoj Bharathiraja Death : பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களிலும் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரபலங்கள் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

Vairamuthu mourns for the demise of Manoj Bharathiraja gan
Manoj Bharathiraja Passed Away

மனோஜ் பாரதிராஜா ஹீரோவாக அறிமுகமான தாஜ்மகால் படத்திற்கு பாடல் எழுதியது வைரமுத்து தான். அப்படத்தில் பாரதிராஜா மகன் அறிமுகமாவதால் 'சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா' என பாடல் வரிகளை எழுதி இருந்தார் வைரமுத்து. தற்போது சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா? என கண்ணீருடன் அந்த இரங்கல் பதிவில் குறிப்பிட்டு உள்ளார் கவிஞர் வைரமுத்து. 

வீடியோ : மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!


Vairamuthu

வைரமுத்து பதிவிட்டுள்ள இரங்கல் பதிவு இதோ...

“மகனே மனோஜ்! 
மறைந்து விட்டாயா?

பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?

'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே 

சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?

உன் தந்தையை 
எப்படித் தேற்றுவேன்?

"எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா" என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?

உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?

முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை

சாவுக்குக் கண்ணில்லை

எங்கள் உறக்கத்தைக் 
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்”

இதையும் படியுங்கள்... மனோஜின் மனைவியும் ஹீரோயினா? பாரதிராஜா மகனின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் லவ் ஸ்டோரி!

Latest Videos

vuukle one pixel image
click me!