மனோஜின் மனைவியும் ஹீரோயினா? பாரதிராஜா மகனின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் லவ் ஸ்டோரி!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, கேரளத்து ஹீரோயின் ஒருவரை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரின் லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.

Manoj Bharathiraja Cute Love Story his Wife nandana also heroine gan

Manoj Bharathiraja Love Story : இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ், கடந்த 1999ம் ஆண்டு வெளியான தாஜ்மகால் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை இயக்கியது அவரது தந்தை பாரதிராஜா தான். தாஜ்மகால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் மனோஜ் நடித்தார். ஆனால் தாஜ்மகால் படம் வாங்கிக் கொடுத்த கொஞ்ச நஞ்ச பெயரைக் கூட மற்ற படங்கள் அவருக்கு வாங்கிக் கொடுக்கவில்லை.

Manoj Bharathiraja Wife Nandana

ஹீரோவாக சோபிக்க முடியாததால், இயக்குனராக முடிவெடுத்த மனோஜ், கடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படமும் அவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது. சினிமாவில் இவருக்கு வெற்றிகிட்டாவிட்டாலும் காதல் வாழ்க்கையில் வெற்றிகண்டுள்ளார் மனோஜ். இவர் தன்னுடன் சாதுரியன் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த மலையாள நடிகையான நந்தனா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

வீடியோ : மகனின் மறைவால் உடைந்துபோன பாரதிராஜா; ஆறுதல் சொல்ல படையெடுத்து வந்த பிரபலங்கள்!


Manoj bharathiraja Family

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து கடந்த 2006-ம் ஆண்டு இவர்களது திருமணம் கேரளாவில் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் கிராண்டாக மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார் பாரதிராஜா. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மனோஜ் - நந்தனா ஜோடியை வாழ்த்தியது. இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில் மூத்த மகள் பெயர் ஆர்த்திகா, இரண்டாவது மகள் பெயர் மதிவதினி.

Manoj bharathiraja Wife and Daughters

மனோஜை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகிவிட்டார் நந்தனா. அதன்பின்னர் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை அவர் கவனித்து வந்தார். மனோஜின் மூத்த மகள் ஆர்த்திகா இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை இயக்கி தன் தாத்தா பாரதிராஜாவிடம் பாராட்டை பெற்றிருந்தார். அதேபோல் மனோஜின் இரண்டாவது மகள் மதிவதினி தற்போது கல்லூரியில் படித்து வருகிறாராம்.

Manoj Bharathiraja Death

கடந்த மாதம் தான் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. இதனிடையே நேற்று மாலை 6 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே மனோஜின் உயிர் பிரிந்துவிட்டதாம். மனோஜ் பாரதிராஜாவின் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மறைவு – சினிமா, அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

Latest Videos

vuukle one pixel image
click me!