Manoj Bharathiraja last wish : பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தந்தையை போல் ஒரு வெற்றிகரமான இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்தார் மனோஜ். அந்த கனவு கடந்த 2023-ம் ஆண்டு நனவானது. அவர் இயக்கிய முதல் திரைப்படமான மார்கழி திங்கள் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படத்தில் அவரது தந்தை பாரதிராஜாவும் நடித்திருந்தார்.
24
Manoj Bharathiraja
பலவருட காத்திருப்புக்கு பின் இயக்குனர் ஆனாலும் அவரின் கடைசி ஆசை என்பது நிறைவேறாமல் போய் உள்ளது. மனோஜ் பாரதிராஜா, தன்னுடைய தந்தை இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடினார். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போனது. அந்த படத்திற்கான கதையை 13 ஆண்டுகளுக்கு முன்னரே தயார் செய்துவைத்தாலும் அந்த ஸ்கிரிப்டை கையில் எடுக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு தடங்கல் வந்துவிடுமாம்.
இதனால் சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வந்தார் மனோஜ் பாரதிராஜா. தற்போது அவரின் மரணத்தால் அந்த படம் கடைசிவரை கைகூடாமல் போய் உள்ளது. சிகப்பு ரோஜாக்கள் தமிழ் சினிமாவின் ஒரு கிளாசிக் ஹிட் திரைப்படமாகும். கடந்த 1978-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் பாக்கியராஜ், ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக்கரசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
44
Manoj Bharathiraja Last Wish
சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து எடுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் கடைசி வரை அப்படத்தை மனோஜ் பாரதிராஜாவால் எடுக்க முடியவில்லை. அவரின் மகளும் இயக்குனராக வேண்டும் என்கிற முனைப்போடு இருப்பதால் அவர் தந்தையின் கனவான சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.