செய்த தவறுகளை ஒத்துக் கொண்டு வைரமுத்து கவிதை..! கர்வம் கழுவி முடிந்தது என உருக்கம்

Published : Nov 26, 2025, 10:46 AM IST

கவிஞர் வைரமுத்து தேனி அருகே பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணைக்கு சென்று வந்தபின் தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஒரு கவிதையை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
13
Vairamuthu Visit sothuparai dam

தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ் குமார் என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, அவர்கள் இசையில் உருவான பல சூப்பர்ஹிட் பாடல்களுக்கு தன்னுடைய பாடல் வரிகளால் உயிர்கொடுத்தவர் வைரமுத்து. கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு பெரியளவில் பாடல் எழுத வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் மீடூ புகார் தான். பாடகி சின்மயி இவர்மீது கொடுத்த மீடூ புகாரை அடுத்து வைரமுத்துவுக்கு பாடல் எழுதும் வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

23
சோத்துப்பாறை அணைக்கு சென்ற வைரமுத்து

சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தன் மனதில் தோன்றும் கவிதைகளை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் வைரமுத்து. அந்த வகையில், அண்மையில் சோத்துப்பாறை அணைக்கு சென்றிருந்த அவர், அங்கு சென்றுவந்த பின் தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அங்கு தான் கேட்ட நீரோசை தன்னை ஏதோ செய்ததாகவும், கவிஞன் என்கிற தன்னுடைய கர்வம் பாதியாக குறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

33
வைரமுத்துவின் உருக்கமான கவிதை

“சோத்துப்பாறை போயிருந்தேன்

நீர்த்தேக்கத்தின் நீரோசை கேட்டேன்

அந்த ஓசை என்னை என்னென்னவோ செய்தது

கவிஞன் என்ற கர்வத்தைக் கழுவி முடித்தது

மூளைக்குள் ஒட்டியிருந்த ஒட்டடைகளை ஒற்றி எடுத்தது

என்னைப் பாதி மரணத்திற்குப் பழக்கப் படுத்தியது

அதன் கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்டேன்

ஒரு மனிதன் விழித்திருக்கும் நேரமெல்லாம் தன்னையே நினைத்துக் கொண்டிருத்தல் தவறு;

நித்தம் ஒருபொழுதேனும் நினைவொழிய வேண்டும்

காலியாகாத பாத்திரத்தில் புதியதை நிரப்ப முடியாது

தன்னை மறந்து தன் நாமம் கெட்டுக் காலம் கடந்து கருத்தழிய வேண்டும்

அந்த ஓசை அப்படியோர் உபாசனை செய்தது

அதுவொரு மன மருத்துவம்

அதை எதிர்பார்த்துச் செல்லவில்லை; ஆனால் அது நேர்ந்தது

அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை; சுண்டுவிரல் மட்டும் சொர்க்கத்தில் நுழைந்துவந்த அனுபவம்

எதில் வேண்டுமானாலும் இது நேரலாம்

சிறு தூறலின் சிணுங்கலில், வானவில் துண்டில், கடக்கும் மேகங்களின் உருவ மாற்றத்தில், இருளின் ஆழ்கடலில், முதல் வெளிச்சத்தின் முணுமுணுப்பில், உதிரும் சருகில், அதிரும் பூமியில் இது நேரலாம்

எனக்கு நீரோசையில் நேர்ந்தது நேற்று

கொஞ்ச நேரம் இறந்து பிறந்தேன்

இன்று எனக்கு வயது ஒருநாள்”

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories